உலக மகளிர் குத்துச்சண்டை போட்டி: மீண்டும் சாதனை படைப்பாரா மேரி கோம்?

ஞாயிற்றுக்கிழமை, 4 நவம்பர் 2018      விளையாட்டு
Mary Kom 04-11-2018

புது டெல்லி,உலக மகளிர் குத்துச்சண்டை சாம்பியன் போட்டியில் (2018) 6-வது முறையாக தங்கம் வென்று சாதனை படைப்பாரா இந்திய வீராங்கனை மேரி கோம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

சர்வதேச குத்துச்சண்டை சம்மேளனம் (ஏ.ஐ.பி.ஏ) சார்பில் 10-வது உலக மகளிர் குத்துச்சண்டை சாம்பியன் போட்டிகள் டெல்லியில் நவம்பர் 15 முதல் 24-ம் தேதி வரை நடைபெறுகிறது. முன்னாள் சாம்பியன்கள், ஒலிம்பியன்கள் களமிறங்கி போட்டிக்கு மேலும் சிறப்பு சேர்ப்பர் எனத் தெரிகிறது.குறிப்பாக பெதர்வெயிட் பிரிவில் கடந்த 2016-ல் முறை பட்டம் வென்ற இத்தாலியின் அலெஸியா மெஸியானோ, வெள்ளிப் பதக்கம் வென்ற ஆஸி வீராங்கனை கேயே ஸ்காட், தாய்லாந்துபீம்விலாய் லவபியம், ரஷியாவின் அனஸ்டஸிலா பெலியகோவா ஆகியோர் அடங்குவர்.10 எடைப் பிரிவுகளில் 70 நாடுகளில் இருந்து 300-க்கும் மேற்பட்ட குத்துச்சண்டை வீராங்கனைகள் போட்டியில் பங்கேற்கின்றனர். அமெரிக்கா, ஆஸ்திரேலியா, உக்ரைன், ஜெர்மனி, தாய்லாந்து, இங்கிலாந்து, பல்கேரியா போன்றவற்றில் தலைசிறந்த வீராங்கனைகள் கலந்துகொள்கின்றனர்.

இந்தியாவின் மூத்த குத்துச்சண்டை வீராங்கனையும், 5 முறை உலக சாம்பியன் பட்டம் வென்றவருமான மேக்னிபிஷியன்ட் மேரி எனப்படும் மேரி கோம் 48 கிலோ எடைபிரிவில் களமிறங்குகிறார். அவரது தலைமையில் பலமான இந்திய அணியும் போட்டியில் பங்கேற்கிறது. ஆசிய போட்டியில் தங்கமும், ஒலிம்பிக்கில் வெண்கலமும் வென்ற மேரி கோம், தற்போது 6-வது முறையாக தங்கம் வெல்லும் முனைப்பில் உள்ளார்.மேரி கோம் (48 கிலோ), பிங்கி ஜங்ரா (51 கிலோ), மணிஷா மவுன் (54 கிலோ), சோனியா லெதர் (57 கிலோ), சரிதா தேவி (60 கிலோ), சிம்ரஞ்சித் கெளர் (64 கிலோ), லவ்லினா போரோகெயின் (69 கிலோ), ஸ்வட்டி பூரா (75 கிலோ), பாக்யபதி கச்சாரி (81 கிலோ), சீமா புனியா (81 கிலோ கூடுதல்).பயிற்சியாளர்கள்: ரபேல் பெர்காம்ஸ்கோ, ஷிவ் சிங், சந்தியா குருங், அலி குமர், சோட்டே லால் யாதவ், சத்வீர் கெளர் ஆகியோர் இந்திய அணியில் இடம்பெற்றுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து