முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சாத்தூர் தொகுதியில் நிலவேம்பு கசாயம் வழங்கும் பணியை தொடங்கி வைத்தார் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி

ஞாயிற்றுக்கிழமை, 4 நவம்பர் 2018      விருதுநகர்
Image Unavailable

சாத்தூர், - சாத்தூர் தொகுதியில் நிலவேம்பு கசாயம் வழங்கும் பணியை அமைச்சர்  கே.டி.ராஜேந்திரபாலாஜி தொடங்கி வைத்தார்
 மழைக்காலம் தொடங்கி விட்ட நிலையில் காய்ச்சல், டெங்கு எனும் வைரஸ் காய்ச்சல்களால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.  இந்நிலையில் டெங்கு காய்ச்சலைத் தடுக்க தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பல்வேறு நடவடிக்கைளை எடுத்து வருகின்றார். அதன் ஒரு பகுதியாக சாத்தூர் தொகுதியில் ஆலங்குளத்தில் நிலவேம்பு கசாயம் வழங்கும் பணியை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தொடக்கி வைத்தார். ஏராளமான பொதுமக்கள் நிலவேம்பு கசாயம் வாங்கி பருகின்றனர். நிகழ்ச்சியில் ராதாகிருஷ்ணன் எம்பி, கலெக்டர் சிவஞானம், சந்திரபிரபா எம்எல்ஏ, ஒன்றிய செயலாளர்கள் எதிர்கோட்டை மணிகண்டன், ராமராஜ், கூட்டுறவு சங்க தலைவர் குறிஞ்சியார்பட்டி மாரியப்பன், ஆலங்குளம் அழகா்சாமி0 உட்பட அரசு அதிகாரிகள், அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து