ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

டோக்கியோ,ஜப்பானில் 5.9 ரிக்கடரில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.ஜப்பானில் உள்ள ஹோக்கய்டோ தீவில் நேற்று கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இங்கு 5.9 ரிக்கடரில் நில நடுக்கம் பதிவானதாக அறிவிக்கப்பட்டது, வடகிழக்கில் ஷிபெட்சூ பகுதியில் இருந்து 107 கி.மீட்டர் தூரத்தில் பூமிக்கு அடியில் 8 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இந்த நில நடுக்கத்தால் ஏற்பட்ட உயிரிழப்பு மற்றும் சேத விவரங்கள் வெளியிடப்படவில்லை.
இதே ஹோக்கய்டோ தீவில் கடந்த செப்டம்பரில் 6.6 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அதில் உருவான நிலச்சரிவில் வீடுகள் மண்ணில் புதைத்தன. அதில் 40-க்கும் மேற்பட்டோர் பலியாகினர். ஜப்பான் பூகம்ப தாக்குதல் பகுதியில் உள்ளது. அதனால் அங்கு அடிக்கடி நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றன.