அமெரிக்க இடை தேர்தலில் அதிபர் டிரம்ப் கட்சிக்கு சரிவு

புதன்கிழமை, 7 நவம்பர் 2018      உலகம்
Trump 27-10-2018

வாஷிங்டன், அமெரிக்காவில் பிரதிநிதிக்களுக்கான இடைத் தேர்தலில் டிரம்பின் குடியரசுக் கட்சி சரிவை சந்தித்துள்ளது. ஆனால் செனட் சபையை குடியரசுக் கட்சி தக்க வைத்துள்ளது.

அமெரிக்க அதிபராக டிரம்ப் பொறுப்பேற்ற இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்காவில் இடைத் தேர்தல் நடத்து முடிந்துள்ளது.  அமெரிக்க நாடாளுமன்றத்தில் உள்ள செனட் (100 உறுப்பினர்கள்) மற்றும் பிரதிநிதிகள் சபைக்கு (435 உறுப்பினர்கள்) தேர்தல் நடந்தது. பதவிக்காலம் முடிவடைந்த பிரதிநிதிகள் சபைக்கும். செனட்டின் 435 உறுப்பினர்கள் பதவிக்கும், 36 கவர்னர் பதவிக்கும் தேர்தல் நடந்தது.

தேர்தல் முடிந்தவுடன் உடனடியாக ஓட்டுக்கள் எண்ணும் பணி நடந்தது. இதில், சென்ட் சபையை குடியரசு கட்சியினர் தக்க வைத்து கொண்டனர். நடந்து முடிந்த இடைத் தேர்தலில்களில் இம்முறைதான் அதிக அளவிலான எண்ணிக்கையில் வாக்கு பதிவு நடந்துள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அமெரிக்காவில் சமீப காலமாக நடந்து கலச்சார பிரச்சனை, இனவெறி, குடியுரிமை பிரச்சனைக் போன்றவை காரணமாக டிரம்பின் மீது அவரது குடியரசுக் கட்சி மீது எழுந்த விமர்சனங்களுக்கு பதிலாக இந்த பிரதிநிதிகளுக்கானஇடைத் தேர்தலில் டிரம்பின் குடியரசுக் கட்சி சிறிய சரிவைச் சந்தித்துள்ளது என்று அரசியல் ஆர்வலர்கள் பலரும் விமர்சித்துள்ளனர்.

உடற்பயிற்சியும் ஆரோக்கியமும் | என்றும் 16 | THINABOOMI

இழந்த சொத்து, பதிவி ஆகிவற்றை மீட்டு தரும் ஸ்ரீ ராமநவமி வழிபாடு | PARIGARA STHALANGAL | THINABOOMI

FIR முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வது எப்படி | How to file FIR | Indian Law | Thinaboomi

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து