இளநீரின் அருமைகளை தமிழில் விவரிக்கும் சீனப்பெண்

புதன்கிழமை, 7 நவம்பர் 2018      உலகம்
Chinese girl 2018 11 07

பெய்ஜிங், சீனப் பெண் நிலான பேசும் தமிழ்தான் இணையத்தில் வீடியோவாக வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் நிலானி அங்குள்ள ஒரு மார்க்கெட் பகுதிக்கு செல்கிறார். கூடவே நம்மையும் அதாவது நேயர்களையும் அழைத்து செல்கிறார். அந்த மார்க்கெட் பெயர், அங்கிருக்கும் பொருட்களை தமிழில் கூறி அறிமுகப்படுத்துகிறார்.

அது ஒரு பழ மார்க்கெட்!! இங்க ஒரு பிரஷ்ஷான பழா கடை இருக்கு. எல்லா பழங்களும் இங்கே கிடைக்கும் என்று சொல்லிக் கொண்டே அங்குள்ள கடை ஒன்றில் இருந்த இளநீரை எடுத்து கையில் வைத்து கொள்கிறார். அந்த இளநீர் நம்ம ஊர் இளநீர் போல இல்லை. வெட்டப்பட்டு, அப்படியே எடுத்து ஸ்ட்ரா போட்டு குடிக்கும்படிதான் ரெடியாக வைத்திருக்கிறார்கள்.

அந்த இளநீரை கையில் வைத்து கொண்டு நிலானி பேசுகிறார். இது என்னான்னு பாத்தீங்கன்னா இளாநீர். தமிழ்நாட்டில் தினசரி 2 இளநீரு குடிப்பது வழக்கம் என்று சொல்கிறார். அதிலயும் கொஞ்சி கொஞ்சி பேசும் தமிழில் இளநீரை பற்றி சொல்வது இளநீரின் ருசியை விட இனிமையாகவே இருக்கிறது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

Tata Harrier 2019 SUV Full Review | In Depth Review - Pros & Cons | Thinaboomi

FIR முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வது எப்படி | How to file FIR | Indian Law | Thinaboomi

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து