அயோத்தியில் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட அகல் விளக்குகள் ஏற்றி கின்னஸ் சாதனை

புதன்கிழமை, 7 நவம்பர் 2018      இந்தியா
Ayodhya-3 lakh lights 2018 11 07

அயோத்தி, உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சரயு நதிக்கரைப் படித்துறைகளில் 3 லட்சம் அகல் விளக்குகள் ஏற்றப்பட்டு புதிய உலக சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.

கின்னஸ் வேர்ல்ட் ரிக்காட்ஸ் அமைப்பின் அதிகாரபூர்வ நடுவர் ரிஷி நாத் இதுகுறித்து தெரிவிக்கையில்,

அயோத்தியின் சரயு நதிக்கரையில் தீபோத்சவ நிகழ்வு வண்ணமயமாக அமைக்கப்பட்டிருந்தது. இங்கு ஓர் உலக சாதனை படைக்கப்பட்டுள்ளது. 5 நிமிடங்களுக்கு ஒரு முறை என 3,01,152 எண்ணிக்கையிலான விளக்குகள் தொடர்ந்து ஒளிர்ந்து கொண்டேயிருந்தன. இது ஒரு புதிய சாதனையாகும். ராம் கி பைதி அமைந்துள்ள நதிக்கரையின் இரு மருங்கிலும் 3.35 லட்சம் விளக்குகள் ஒளிரவிட வேண்டும் என்பதுதான் விழாவின் இலக்கு.

இது 2016-ம் ஆண்டு அரியானாவில் நிகழ்த்தப்பட்ட முந்தைய சாதனையை முறியடித்துள்ளது, அங்கு ஒரு நிகழ்ச்சியில் 1,50,009 விளக்குகள் ஏற்றப்பட்டன. ஆனால் இப்போது அயோத்தியில் நிகழ்த்தப்பட்டது தனிச்சிறப்பு வாய்ந்ததாக அமைந்துவிட்டது. இவ்வாறு கின்னஸ் ரிக்கார்டு நடுவர் தெரிவித்தார். இந்நிகழ்வின்போது பிரதமர் நரேந்திர மோடி மற்றும் தென் கொரியாவின் முதல் பெண்மனி கிம் ஜங் சூக் உடனிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து