அந்தமானில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு - மீனவர்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கை

புதன்கிழமை, 7 நவம்பர் 2018      இந்தியா
chennai meterological 2018 10 24

சென்னை : அந்தமான் கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி நாளை உருவாக வாய்ப்புள்ளது. தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலு குறைந்து விட்டதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே மீனவர்கள் தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அந்தமான் பகுதிகளுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

கனமழைக்கு...

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று தெரிவிக்கையில், தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலு குறைந்து விட்டது. இந்தக் காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலு குறைந்து குமரி கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் நிலவுவதால், தென் தமிழகம் மற்றும் தென் தமிழக மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கனமழைக்கும், ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கும் வாய்ப்புள்ளது. இதனால், மீனவர்கள் குமரிக்கடல் மர்றும் இந்திய பெருங்கடல் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்.

புதிய காற்றழுத்தம்...

நாளை (வெள்ளிக்கிழமை) அந்தமான் கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளது. தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அந்தமான் பகுதிகளுக்கு மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம். சென்னையில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

உடற்பயிற்சியும் ஆரோக்கியமும் | என்றும் 16 | THINABOOMI

இழந்த சொத்து, பதிவி ஆகிவற்றை மீட்டு தரும் ஸ்ரீ ராமநவமி வழிபாடு | PARIGARA STHALANGAL | THINABOOMI

FIR முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வது எப்படி | How to file FIR | Indian Law | Thinaboomi

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து