முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருமலைக்கேணியில் கந்தசஷ்டி திருவிழா இன்று தொடங்குகிறது. நவ.13 ல் சூரசம்ஹாரம்

புதன்கிழமை, 7 நவம்பர் 2018      திண்டுக்கல்
Image Unavailable

நத்தம்: -  திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உள்ள பிரசித்திபெற்ற திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்தசஷ்டி விழா இன்று தொடங்குகிறது.மாவட்ட அளவில் பிரசித்தி பெற்ற இக்கோயிலில் கந்தசஷ்டி இன்று கொடியேற்றத்துடன் துவங்குகிறது. திண்டுக்கல் நத்தம், சாணார்பட்டி, கோபால்பட்டி, செங்குறிச்சி, கம்பிளியம்பட்டி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் காப்பு கட்டி விரதம் துவங்குவர். நாளை 9-ம் தேதி முருகப்பெருமான் சிவ பூஜை திருக்காட்சி நடக்கிறது. நவ.10 ல் சிவ உபதேச திருக்காட்சி, நவ.11 ல் அருணகிரியாருக்கு நடனக்காட்சி, நவ.12 ல் வேல்வாங்கும் காட்சி நடக்கிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நவ.13 அன்று கந்தசஷ்டி சூரசம்ஹாரம் நடக்க உள்ளது. மறுநாள் 14-ம் தேதி திருக்கல்யாண உற்சவத்துடன் விழா நிறைவடைகிறது. பரம்பரை அறங்காவலர் அழகுலிங்கம், செயல் அலுவலர் கணபதிமுருகன் உள்ளிட்ட குழுவினர் விழாவிற்கான ஏற்பாடுகளை செய்கின்றனர்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து