ரஷ்யா மீது கூடுதல் பொருளாதார தடை விதிக்க அமெரிக்கா ஆயத்தம்

வியாழக்கிழமை, 8 நவம்பர் 2018      உலகம்
Russia United States 08-11-2018

லண்டன்,பிரிட்டனில் முன்னாள் ரஷ்ய உளவாளி மீது நச்சுத் தாக்குதல் நடத்தப்பட்டது தொடர்பாக, ரஷ்யா மீது கூடுதல் பொருளாதாரத் தடைகளை விதிக்க அமெரிக்கா ஆயத்தமாகி வருகிறது.

இது குறித்து அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஹெதர் நாவெர்ட் கூறியதாவது:-பிரிட்டனில், முன்னாள் ரஷ்ய உளவாளி செர்கெய் ஸ்க்ரிபால் மீது நச்சுத் தாக்குதல் நடத்தியதன் மூலம், ரசாயன மற்றும் உயிரி ஆயுதங்களைத் தடை செய்யும் அமெரிக்கச் சட்டத்தை ரஷ்யா மீறியுள்ளதாக ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, அந்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்ல முடிவுசெய்துள்ளோம். அதன்படி, ரஷ்யா மீது கூடுதலாக பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படும். நச்சுத் தாக்குதல் நடத்தியுள்ள ரஷ்யாவை தண்டிப்பது குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் வெளியுறவுத் துறை அமைச்சகம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது என்றார் ஹெதர் நாவெர்ட்.

உடற்பயிற்சியும் ஆரோக்கியமும் | என்றும் 16 | THINABOOMI

இழந்த சொத்து, பதிவி ஆகிவற்றை மீட்டு தரும் ஸ்ரீ ராமநவமி வழிபாடு | PARIGARA STHALANGAL | THINABOOMI

FIR முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வது எப்படி | How to file FIR | Indian Law | Thinaboomi

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து