முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆர்வத்துடன் கணினி கற்கும் கேரள கார்த்தியாயினி பாட்டி தன் பெயரை ஆங்கிலத்தில் எழுதி பார்த்து நெகிழ்ச்சி

வியாழக்கிழமை, 8 நவம்பர் 2018      இந்தியா
Image Unavailable

திருவனந்தபுரம்,கேரள எழுத்தறிவுத் தேர்வில் 98 சதவீத மதிப்பெண்களைப் பெற்று பாராட்டுகளைக் குவித்த கார்த்தியாயினி பாட்டிக்கு அம்மாநில கல்வித்துறை அமைச்சர் லேப்டாப் பரிசளித்துள்ளார். இதைத் தொடர்ந்து தன் பெயரை முதல் முறையாக ஆங்கிலத்தில் எழுதிப் பார்த்த அந்தப் பாட்டி நெகிழ்ந்தார்.

ஆலப்புழாவைச் சேர்ந்தவர் கார்த்தியாயினி பாட்டி. 96 வயதான இவர் அக்‌ஷரலக்‌ஷம் எழுத்தறிவுத் தேர்வில் 98 சதவீத மதிப்பெண்களைப் பெற்று, அனைவரின் பாராட்டுகளையும் பெற்றார். இவருக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் திருவனந்தபுரத்தில் நடைபெற்ற விழாவில் சான்றிதழ் அளித்து, பாராட்டு தெரிவித்தார். அப்போது கணினி கற்க ஆசைப்படுவதாக கார்த்தியாயினி பாட்டி தெரிவித்திருந்தார். இந்நிலையில் கேரள கல்வித்துறை அமைச்சர் ரவீந்திரநாத் அவருக்கு லேப்டாப் பரிசளிக்க முடிவு செய்தார். அதன்படி கார்த்தியாயினி பாட்டியின் வீட்டுக்கு நேரில் சென்ற அமைச்சர், லேப்டாப்பைப் பரிசாக அளித்தார். அப்போது தன் பெயரை முதல் முறையாக ஆங்கிலத்தில் எழுதிப் பார்த்து நெகிழ்ந்தார் கார்த்தியாயினி பாட்டி.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து