முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அரசு மருத்துவமனையில் போதுமான அளவுக்கு மாத்திரைகள் உள்ளன அமைச்சர் விஜயபாஸ்கர்

வியாழக்கிழமை, 8 நவம்பர் 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை,காய்ச்சல் வந்தால் பொதுமக்கள் உடனடியாக அரசு மருத்துவமனையை நாட வேண்டும் என்று தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். காய்ச்சல் பாதிப்பு குறைந்து வருகிறது என்றும் அமைச்சர் கூறினார். பன்றிக் காய்ச்சலை முழுமையாகக் குணப்படுத்தக் கூடிய மருந்துகள் அரசு மருத்துவமனைகளில் இருக்கின்றன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர்:, சென்னையில் 70 பேர் காய்ச்சலுக்கும், 15 பேர் டெங்கு காய்ச்சலுக்கும் சிகிச்சை பெற்று வருகின்றனர். நுரையீரல் பாதிப்பு உள்ளவர்களுக்கு பன்றிக் காய்ச்சல் வந்தால் விரைந்து சிகிச்சை அளிக்கப்பட வேண்டும். காய்ச்சலுக்கு சுய மருத்துவம் செய்து கொள்ளக் கூடாது. டெங்கு காய்ச்சல் வந்தால் பாரசிட்டமால் மருந்தோ அல்லது ஊசியோ போட்டுக் கொள்ளக் கூடாது. காய்ச்சல் வந்தால் உடனே மருத்துவமனைக்குச் சென்று பரிசோதனை செய்து கொள்வது நல்லது என்றுதெரிவித்துள்ளார்.கடும் காய்ச்சல் தொண்டை வலி இருந்தால் நீங்களாக ஏதேனும் மாத்திரைகளை வாங்கி சாப்பிடாதீர்கள். அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெறுங்கள். எல்லா அரசு மருத்தவமனைகளிலும் போதுமான அளவுக்கு மருந்து மாத்திரைகள் உள்ளன. காய்ச்சல் ஒரே நாளில் குணமாகாது. தொடர்ந்து 4, 5 நாட்கள் இருக்கும். உரிய மருந்து சாப்பிட்டால் குணமாகி விடும் என்று அமைச்சர் தெரிவித்தார். தமிழ்நாடு முழுவதும் டெங்கு, பன்றி காய்ச்சலுக்கென அரசு மருத்துவமனைகளில் தனி வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன என்றும் அமைச்சர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து