ஏமனில் நடந்த உள்நாட்டுச் சண்டையில் 58 வீரர்கள் பலி

வெள்ளிக்கிழமை, 9 நவம்பர் 2018      உலகம்
yemen 09-11-2018

ஏமன், ஏமனின் முக்கியத்துவம் வாய்ந்த துறைமுக நகரான ஹோடைடாவை கிளர்ச்சியாளர்களிடமிருந்து கைப்பற்றுவதற்காக அரசுப் படையினருக்கும்,கிளர்ச்சியாளர்களுக்கும் கடந்த சில நாள்களாக நடந்து வரும் சண்டையில், இரு தரப்பிலும் வியாழக்கிழமை மட்டும் 58 பேர் உயிரிழந்ததாக மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்தனர்.அந்த நகருக்குச் செல்லும் முக்கியச் சாலையைக் கைப்பற்றியுள்ளதாக அரசுப் படையினர்  தெரிவித்த நிலையில், இந்தச் சண்டையில் இதுவரை 200-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து