முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தனியொரு ஆளாக இந்திய பொருளாதாரத்தை சீர்குலைத்த மோடி: சீதாராம் யெச்சூரி தாக்கு

வெள்ளிக்கிழமை, 9 நவம்பர் 2018      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி,பணமதிப்பிழப்பு நீக்கம் என்ற நடவடிக்கையின் மூலம் தனியொரு ஆளாக பிரதமர் நரேந்திர மோடி இந்தியப் பொருளாதாரத்தையே சீர்குலைத்து விட்டதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலர் சீதாராம் யெச்சூரி கூறியுள்ளார்.

நவம்பர் 8ம் தேதி பணமதிப்பிழப்பு நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதன் 2ம் ஆண்டு நிறைவு தினத்தை முன்னிட்டு சீதாராம் யெச்சூரி தனது கருத்தைப் பதிவு செய்துள்ளார்.மத்திய அரசு எடுத்த பணமதிப்பிழப்பு நடவடிக்கைக் காரணமாக இந்திய பொருளாதாரமும், மக்களின் வாழ்வாதாரமும் முற்றிலும் சீரழிக்கப்பட்டுவிட்டது என்றும் அவர் கூறியுள்ளார். மோடியும், அவரது அமைச்சரவை சகாக்களும் பணமதிப்பிழப்பு நீக்க நடவடிக்கையினால் கருப்புப் பணம் ஒழியும், ஊழல் மற்றும் பயங்கரவாதத்தை தடுத்து நிறுத்த முடியும், டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை அதிகரிக்கும் என்று கூறினார்கள். ஆனால் 2 ஆண்டுகள் ஆகிவிட்டன. மோடி மௌனமாக இருக்கிறார். உண்மை என்னவென்றால், மோடி தனி நபராக, இந்திய பொருளாதாரத்தையும், மக்களின் வாழ்க்கை மற்றும் வாழ்வாதாரங்களையும் நாசமாக்கிவிட்டார் என்று தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து