பா.ஜ.க.வுக்கு எதிராக மதச் சார்பற்ற கட்சிகள் ஒன்றிணைய வேண்டும்: சந்திரபாபு நாயுடு வேண்டுகோள்

வெள்ளிக்கிழமை, 9 நவம்பர் 2018      இந்தியா
Chandrababu Naidu Deve Gowda 09-11-2018

பெங்களூர்,நாட்டின் நலன் கருதி, பா.ஜ.கவுக்கு எதிராக மதச் சார்பற்ற கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் என்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு வலியுறுத்தினார்.மதச் சார்பற்ற ஜனதாதளம் கட்சியின் தலைவரும், முன்னாள் பிரதமருமான தேவெ கெளடாவை பெங்களூரில்   சந்தித்து பேசிய பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:மத்தியில் ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள பா.ஜ.கவால், நாட்டின் நலனுக்கும், ஜனநாயகத்துக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. சிறுபான்மை மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். பிரதமர் மோடி மேற்கொண்ட பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் தேசிய அளவில் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். பொருளாதாரம் சீர்குலைந்துள்ளது.பெட்ரோல், டீசல் விலை உயர்வால் நடுத்தர, ஏழை மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சி.பி.ஐ, மோடி அரசின் கைப்பாவை போல செயல்படுகிறது.

ரிசர்வ் வங்கியின் நடவடிக்கையில் பா.ஜ.கவினர் தலையிடுவதால், அந்த வங்கியின் ஆளுநர் தனது பதவியை ராஜிநாமா செய்யப் போவதாகத் தெரிவித்துள்ளார். ரபேல் விவகாரத்தில் பிரதமர் உறுதியான எந்தப் பதிலையும் கூறாதது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.ஆந்திரத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கி, நிதி தருவதாக அளித்தவாக்குறுதியை நிறைவேற்றத் தவறியதால், பா.ஜ.க. கூட்டணியிலிருந்து வெளியேற வேண்டிய கட்டாயம் எங்களுக்கு ஏற்பட்டது. எனவே, நாட்டின் நலன், ஜனநாயகம், பொருளாதாரம், சிறுபான்மை மக்கள் மீதான அச்சுறுத்தல், விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தத் தவறிய பா.ஜ.க.வை எதிர்க்க, காங்கிரஸ் உள்பட மதச் சார்பற்ற கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைவது அவசியம்.பிரதமர் தேர்வு குறித்து முக்கியக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவோம். எனக்கு பிரதமர் ஆவதைவிட நாட்டின் நலன் காப்பதே முக்கியம் என்றார்.சந்திரபாபு நாயுடு.

2019 தமிழக சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகள்

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து