முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பொதுமக்களுக்கு இடையூறு செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை: புதிய டி.எஸ்.பி. வெங்கடேசன் எச்சரிக்கை

வெள்ளிக்கிழமை, 9 நவம்பர் 2018      விருதுநகர்
Image Unavailable

அருப்புக்கோட்டை --     அருப்புக்கோட்டை  டி.எஸ்.பி. தனபால் பதவி உயர்வு பெற்று மாறுதலாகி சென்ற நிலையில் கடந்த சில மாதங்களாக பொறுப்பு டி.எஸ்.பிக்களே பணிகளை கவனித்து வந்தனர். இந்நிலையில் ஸ்ரீ வைகுண்டம் பகுதியில் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்த வெங்கடேசன் டி.எஸ்.பியாக பணி உயர்வு பெற்று அருப்புக்கோட்டையில் பொறுப்பேற்று கொண்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்: அருப்புக்கோட்டை நகரில் குறுகிய ரோடுகளாக உள்ளது. இதில்  போக்குவரத்து நெரிசலால் வாகனஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருவதாக கோரிக்கைகள் வந்துள்ளன. காரணம் ஒரு வழிப்பாதை இல்லாததும், வெளியூர்களில் இருந்து வரும் வியாபாரிகள் கடைகளுக்கு முன்  பகுதியில் நடைபாதையை ஆக்கிரமித்து வாகனங்களை நிறுத்துவதாலும், முக்கிய பகுதிகளில் போக்குவரத்திற்கு இடையூராக விளம்பர போர்டுகளை வைப்பதாலும் போக்குவரத்து நெரிசலுக்கு காரணமாக உள்ளது. இதனை கருத்தில் கொண்டு வணிகர் சங்கம் மற்றும் கடை வியாபாரிகளை அழைத்து கலந்தாய்வு கூட்டம் நடத்தி இதற்க்கான தீர்வை விரைவில் ஏற்ப்படுத்துவேன். மேலும் மதுரை தூத்துக்குடி நான்கு வழிச்சாலையில் அடிக்கடி விபத்து ஏற்ப்படுகிறது. காரணம் ரோடு நடுவே சிக்னல் கோடுகள் இல்லாததும், சாலைகளில் ஒளிரும் விளக்குகள் அமைக்கப்படாததாலும் வாகன விபத்துக்கள் அதிகம் ஏற்ப்படுகிறது. இதனை தீர்க்க சாலைபாதுகாப்பு நிறுவனங்களிட் பேசி குறைகளை நிவர்த்தி செய்ய நடவடிக்கை மேற்க்கொள்ளப்படும். மேலும் இரவு நேரங்களில் சந்தேகப்படு;ம் படியாக சுற்றி  திரிபவர்களை கண்டுபிடித்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். குடிபோதையில் வாகனம் ஓட்டபவர்கள், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்ப்படுத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். வீட்டை பூட்டி விட்டு  வெளியூர் செல்பவர்கள் அருகில் உள்ள காவல்நிலையத்தில் தகவல் தெரிவிக்கவும் என்று கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து