ஆண்டிபட்டியில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்

வெள்ளிக்கிழமை, 9 நவம்பர் 2018      தேனி
9 andippatti news

ஆண்டிபட்டி .-    ஆண்டிபட்டி எம்.எஸ்.பி. தியேட்டர் முன்பு சர்க்கார் படத்தில் உள்ள சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க கோரி அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
     தேனி மாவட்டம் ஆண்டிபட்டி எம்.எஸ்.பி. திரையரங்கில் விஜய் நடித்த சர்க்கார் படம் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் அதிமுகவினர் தமிழகம் முழுவதும் சர்க்கார் படம் திரையிடப்பட்ட திரையரங்குகளை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். அதன் ஒரு கட்டமாக ஆண்டிபட்டி அதிமுக ஒன்றிய செயலாளர் லோகிராசன் தலைமையில் பேரூர் செயலாளர் முத்து வெங்கடராமன் முன்னிலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது படத்தின் இயக்குநர் முருகதாஸ், நடிகர் விஜய்க்கு எதிராக கோசங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர். இதில் முன்னாள் ஒன்றிய துணை சேர்மன் செல்வராஜ்,மாவட்ட பிரதிநிதி கவிராசன், மகளிரணி கொடியம்மாள், கூட்டுறவு தலைவர் வெள்ளைப் பாண்டி,முன்னாள் கூட்டுறவு துணைத் தலைவர் வீரக்குமார், சாம்சன், முன்னாள் துணை சேர்மன் கண்ணன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து