முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வன்முறையை தூண்டிவிடும் நகர்புற மாவோயிஸ்ட்டுகளை ஆதரிப்பது ஏன் ? காங்கிரசுக்கு பிரதமர் மோடி கேள்வி

வெள்ளிக்கிழமை, 9 நவம்பர் 2018      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி,  வன்முறையை தூண்டிவிடும் நகர்புற மாவோயிஸ்ட்டுகளை காங்கிரஸ் ஆதரிப்பது ஏன் என பிரதமர் மோடி கேள்வி எழுப்பியுள்ளார்.

சத்தீஸ்கர் மாநிலத்தில் அடுத்த மாதம் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும் பஸ்தார் பிரதமர் மோடி  பிரசாரம் செய்தார். பா.ஜ.க வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரித்த பிரதமர் மோடி அங்கு நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:

நகர்புறத்தில் வாழும் மாவோயிஸ்ட்டுகள் குளிர்சாதன அறையில் வசிக்கின்றனர். வெளிநாடுகளில் கல்வி கற்றவர்கள். சொகுசு கார்களில் வலம் வருபவர்கள். ஆனால் பழங்குடியின இளைஞர்களை ரிமோர்ட் கண்ட்ரோல் மூலம் இயக்கி அவர்களது வாழ்க்கையை சீர்குலைப்பவர்கள்.

இதுபோன்ற நகர்புற மாவோயிஸ்ட்டுகளை காங்கிரஸ் கட்சி ஆதரிப்பது ஏன் என்று  நாட்டு மக்களுக்கு காங்கிரஸ் விளக்கம் அளிக்க வேண்டும். இதுபோன்ற மாவோயிஸ்ட்டுகளின் பிடியில் சிக்கி தவிக்கும் பழங்குடியின மக்களை மீட்கவும், அவர்களுக்கு நலத்திட்டங்களை செயல்படுத்தவும், பாஜக அரசு தொடர்ந்து பல பணிகளை செய்து வருகிறது.
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து