முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கடைசி டி-20 போட்டி: டோனி, விராட் கோலி ஆப்சென்டால் சேப்பாக்கத்தில் டிக்கெட் விற்பனை மந்தம்

வெள்ளிக்கிழமை, 9 நவம்பர் 2018      விளையாட்டு
Image Unavailable

Source: provided

சென்னை : இந்திய கிரிக்கெட் அணியில், சிஎஸ்கே-யின் செல்லப்பிள்ளை டோனியும், கேப்டன் விராத் கோலியும் இல்லாததால் சென்னையில் நடைபெறும் கடைசி டி20 போட்டிக்கான டிக்கெட் விற்பனை எதிர்பார்த்தபடி இல்லை என்று கூறப்படுகிறது.

தொடரை கைப்பற்றியது

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டித் தொடரை கைப்பற்றிய இந்திய அணி, 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. முதல் இரு போட்டிகளில் வெற்றி பெற்று இந்தத் தொடரையும் 2-0 என்று கைப்பற்றிவிட்ட நிலையில் கடைசி மற்றும் மூன்றாவது டி20 போட்டி சென்னை சேப்பாக்கத்தில் நாளை நடக்கிறது.

விற்பனை இல்லை

இந்திய அணி வீரர்கள் இன்று சென்னை வருகிறார்கள். இந்தப் போட்டிக்கான டிக்கெட் விற்பனை கடந்த ஞாயிற்றுக்கிழமை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்கியது. 1200 ரூபாயில் இருந்து 2400 ரூபாய் வரை டிக்கெட் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால் எதிர்பார்த்தபடி விற்பனை நடைபெறவில்லை. இந்த மைதானத்தில் 24 ஆயிரம் ரசிகர்கள் இருக்கலாம். குறைந்த அளவு ரசிகர்களே டிக்கெட் வாங்கியுள்ளனர். இன்னும் இரண்டு நாள் இருப்பதால் டிக்கெட் விற்பனை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய அணியில், சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டனும் சென்னையில் செல்லப்பிள்ளையுமான டோனி இல்லாததாலும் இந்திய கேப்டன் விராத் கோலி இல்லாததாலும் ரசிகர்கள் இந்தப் போட்டியில் அதிக ஆர்வம் காட்டவில்லை என்று கூறப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து