முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குவைத் சிட்டியில் பெய்த பேய்மழை ராஜினாமா செய்தார் அமைச்சர் ஹஸ்ஸம்

சனிக்கிழமை, 10 நவம்பர் 2018      உலகம்
Image Unavailable

குவைத்,குவைத் தலைநகர் குவைத் சிட்டியில் பேய் மழை பெய்து நகரமே ஸ்தம்பித்துப் போய் விட்டது. பேய் மழையால் மக்கள் பெரும் பாதிப்பை சந்தித்த நிலையில் அந்த நாட்டு பொதுப்பணித்துறை அமைச்சர் ஹஸ்ஸம் அல் ரூமி திடீரென ராஜினாமா செய்து விட்டார்.

நகரின் அனைத்துப் பகுதிகளிலும் வெள்ளக்காடானது. மீட்புப் பணியில் ராணுவம் ஈடுபடுத்தப்பட்டது. தேசிய பாதுகாப்புப் படையினரும் களம் இறங்கினர். பெரும்பாலான பகுதிகளில் கார்கள் உள்ளிட்ட வாகனங்கள் நீரில் மூழ்கி தத்தளித்ததைக் காண முடிந்தது. சாக்கடைகள் அடைத்துக் கொண்டு சாக்கடை நீரும் மழை நீருடன் கலந்தமக்களைஅவஸ்தைக்குள்ளாக்கி விட்டது.கடந்த வியாழக்கிழமை மாலையிலிருந்து குவைத் சிட்டியில் பெய்து வந்த மழை மேலும் மேலும் வலுத்துக் கொண்டே போனதால்தான் வெள்ளக்காடாகி விட்டது. வெள்ளத்தில் சிக்கி 2 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பல்வேறு பகுதிகளும் வெள்ளத்தில் மிதப்பதால் சமுதாய நல மையங்கள் உள்ளிட்டவற்றில் மக்கள் தங்க வைக்கப்பட்டு வருகின்றனர். மக்கள் வீடுகளை விட்டு வர வேண்டாம் என்று குவைத் உள்துறை அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது. இதற்கிடையே, வெள்ள நிவாரண நடவடிக்கைகளை சரியாக எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்ததைத் தொடர்ந்து அந்த நாட்டு பொதுப்பணித்துறை அமைச்சர் ஹஸ்ஸம் பதவி விலகி விட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து