முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

5 மாநில சட்டசபை தேர்தல்: நாளை முதல் டிச. 7-ம் தேதி வரை கருத்துக் கணிப்பு வெளியிட தடை தேர்தல் ஆணையம் உத்தரவு

சனிக்கிழமை, 10 நவம்பர் 2018      இந்தியா
Image Unavailable

புது டெல்லி,சட்டசபை தேர்தல் நடைபெறும் ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், மிசோரம் மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் நாளை 12-ம் தேதி முதல் டிசம்பர் 7-ம் தேதி வரை தேர்தல் கருத்துக்கணிப்பு முடிவுகளை வெளியிடத் தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.

சத்தீஷ்கர் மாநிலத்தில் நாளை 12-ம் தேதியும், 20-ம் தேதியும் இரு கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. அதேபோல, மத்தியப் பிரதேசம், மிசோரம் ஆகிய மாநிலங்களில் 28-ம் தேதி வாக்குப் பதிவும், ராஜஸ்தான், தெலுங்கானா மாநிலங்களில் டிசம்பர் 7-ம் தேதியும் வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் பிரச்சாரத்தில் தேசியக் கட்சிகளும், மாநிலக் கட்சிகளும் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.இந்நிலையில், நாளை 12-ம் தேதி முதல் டிசம்பர் 7-ம் தேதி அதாவது இறுதிக்கட்ட வாக்குப் பதிவு முடியும் வரை தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்புகளை ஊடகங்கள் வெளியிடத் தேர்தல் ஆணையம்  தடை விதித்துள்ளது.

இது குறித்து தலைமைத் தேர்தல் ஆணையம் நேற்று  வெளியிட்ட அறிவிப்பில், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப்படி நாளை 12-ம் தேதி காலை 7 மணி முதல் டிசம்பர் 7-ம் தேதி மாலை 5.30 மணிவரை 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் தொடர்பாக எந்தவிதமான தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகளையும் நாளேடுகளிலும், தொலைக்காட்சிகளிலும் வெளியிடுவது தடை செய்யப்படுகிறது. மேலும் தேர்தல் தொடர்பாக எந்தவிதமான காட்சிகளையும் வெளிப்படுத்துவது அதாவது மக்களிடம் பெறப்பட்ட கருத்துகளை ஒளிபரப்புவது, ஆய்வுகளை சேனல்களில் வெளியிடுவது தடை செய்யப்படுகிறது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து