முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

24-வது நாளாக தொடர்ந்து இறங்கு முகத்தில் பெட்ரோல், டீசல் விலை..!

சனிக்கிழமை, 10 நவம்பர் 2018      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி,பெட்ரோல், டீசல் விலை நேற்று 24 நாட்களாக தொடர்ந்து சரிவு முகமாக இருந்தது. இதனால் வாகன ஓட்டிகள் சற்றே நிம்மதி அடைந்துள்ளனர்.

அதிகபட்சமாக...பெட்ரோல் விலை நேற்று லிட்டருக்கு 80 ரூபாய் 90 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு 76 ரூபாய் 72 காசுகளாகவும் விற்பனையானது. நேற்று முன்தினம் விலையுடன் ஒப்பிடுகையில் பெட்ரோல் விலையில், 18 காசுகள் குறைந்திருந்தது. டீசல் விலையில் லிட்டருக்கு 17 காசுகள் குறைந்திருந்தது. சென்னையில் கடந்த அக்டோபர் ஒன்றாம் தேதி, ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு 87 ரூபாய் 05 காசுகளாக உயர்ந்தது. அக்டோபர் 4-ஆம் தேதி மேலும் உயர்ந்து அதிகப்பட்சமாக  87 ரூபாய் 33 காசுகளாக இருந்தது.

அக். 18 முதல்...இதற்குப் பின்னர் ஏற்ற, இறக்கத்தில் இருந்த பெட்ரோல் விலை, அக்டோபர் 16,17 தேதிகளில் 86 ரூபாய் 10 காசுகளாக இருந்தது. இதனைத்தொடர்ந்து இறங்கு முகத்தில் இருக்கும் பெட்ரோல் விலை, 24 நாட்களாக குறைந்து நேற்று லிட்டருக்கு 80 ரூபாய் 90 காசுகளாக குறைந்தது. கடந்த 24 நாட்களில் பெட்ரோல் விலையில் லிட்டருக்கு 5 ரூபாய் 20 காசுகள் குறைந்துள்ளது.

கச்சா எண்ணெய்...டீசல் விலையை பொறுத்தவரை கடந்த அக்டோபர் 16,17 தேதிகளில் லிட்டருக்கு 80 ரூபாய் 04 காசுகளாக இருந்தது. இதனைத்தொடர்ந்து படிப்படியாக குறைந்தும், நேற்று 76 ரூபாய் 72 காசுகளாக இருந்தது. கடந்த 24 நாட்களில் டீசல் விலை லிட்டருக்கு 3 ரூபாய் 32 காசுகள் குறைந்துள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைவே பெட்ரோல், டீசல் விலை குறைய காரணமாக சொல்லப்படுகிறது. பெட்ரோல், டீசல் விலை குறைந்துள்ளது வாகன ஓட்டிகள் மத்தியில் கொஞ்சம் ஆறுதலை ஏற்படுத்தியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து