முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சேப்பாக்கத்தில் இன்று கடைசி டி-20 போட்டி: மே.இ.தீவுகளுக்கு எதிரான தொடரை ஒயிட்வாஷ் செய்யும் முனைப்பில் இந்தியா

சனிக்கிழமை, 10 நவம்பர் 2018      விளையாட்டு
Image Unavailable

சென்னை : இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் இன்று நடக்கிறது. இதில் மே.இ.தீவுகளுக்கு எதிரான டி-20 தொடரை முழுமையாக கைப்பற்றி ஒயிட்வாஷ் முனைப்பில் இந்திய அணி உள்ளது.

தொடரை வென்றது

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இதன் டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கிலும், ஒரு நாள் தொடரை 3-1 என்ற கணக்கிலும் இந்தியா கைப்பற்றியது. இரு அணிகள் இடையேயான மூன்று 20 ஓவர் தொடரில் கொல்கத்தாவில் நடந்த முதல் ஆட்டத்தில் 5 விக்கெட் வித்தியாசத்திலும், லக்னோவில் நடந்த 2-வது ஆட்டத்திலும் 71 ரன் வித்தியாசத்திலும் இந்தியா வென்று தொடரை கைப்பற்றியது.

கடைசி போட்டி

இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் இன்று நடக்கிறது. இந்த ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீசை வீழ்த்தி ‘ஹாட்ரிக்’ வெற்றி பெறும் ஆர்வத்தில் ரோகித் தலைமையிலான இந்திய அணி இருக்கிறது. பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் சமபலத்துடன் அணி திகழ்கிறது. கடந்த போட்டியில் ரோகித் சர்மா அதிரடியான சதத்தை வெளிப்படுத்தி ரசிகர்களுக்கு தீபாவளி விருந்து படைத்தார். இதேபோல இன்றும் அவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி சென்னை ரசிகர்களை மகிழ்விப்பாரா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரோகித் சாதனை

20 ஒவரில் 4 செஞ்சூரி அடித்து சாதனை படைத்த ரோகித் சர்மா அதிக ரன் எடுத்தவர் என்ற சாதனையை சேப்பாக்கத்தில் படைப்பாரா? என்று எதிர் நோக்கப்படுகிறது. அதற்கு அவருக்கு இன்னும் 69 ரன்னே தேவை. ரோகித்சர்மா 2271 ரன் (73 இன்னிங்ஸ்) எடுத்து 2-வது இடத்தில் உள்ளார். நியூசிலாந்து வீரர் குப்தில் 2203 ரன் எடுத்து முதல் இடத்தில் உள்ளார். இதேபோல பேட்டிங்கில் தவான், ராகுல், தினேஷ் கார்த்திக், கர்னல் பாண்ட்யா ஆகியோரும் நல்ல நிலையில் உள்ளனர்.

கடும் போராட்டம்

வேகப்பந்து வீரர்கள் உமேஷ்யாதவ், பும்ரா மற்றும் சுழற்பந்து வீரர் குல்தீப் யாதவ் ஆகியோருக்கு இன்றைய போட்டியில் ஓய்வு கொடுக்கப்படுகிறது. அவர்களுக்கு பதிலாக சித்தார்த் கஜல் மட்டும் அணியில் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளார். இதுவரை நடந்த 2 போட்டியிலும் ஆடாத வீரர்களுக்கு சென்னையில் வாய்ப்பு கிடைக்கலாம். பிராத்வெயிட் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணி கடைசி ஆட்டத்திலாவது வென்று ஆறுதல் அடையும் வேட்கையில் உள்ளது. இதனால் அந்த அணி வீரர்கள் கடுமையாக போராடுவார்கள்.

பிராத்வெயிட், ஹெட் மயர், பிராவோ போல்லார்ட் போன்ற சிறந்த வீரர்கள் வெஸ்ட் இண்டீஸ் அணியில் உள்ளனர். பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் அந்த அணி மேம்பாடு அடைவது அவசியமாகும். இந்த ஆட்டம் இரவு 7 மணிக்கு தொடங்குகிறது. ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மற்றும் தூர்தர்சனில் இந்த போட்டி நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து