முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேசிய பயிற்சி முகாமிற்கான 33 பேர் கொண்ட இந்திய மகளிர் ஹாக்கி அணி அறிவிப்பு

சனிக்கிழமை, 10 நவம்பர் 2018      விளையாட்டு
Image Unavailable

புதுடெல்லி : தேசிய பயிற்சி முகாமிற்கான 33 பேர் கொண்ட இந்திய மகளிர் ஹாக்கி அணி அறிவிக்கப்பட்டு உள்ளது.

கர்நாடகாவின் பெங்களூருவில் உள்ள இந்திய விளையாட்டு கழக வளாகத்தில் வருகிற 12-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை இந்திய மகளிர் ஹாக்கி அணிக்கான தேசிய பயிற்சி முகாம் நடைபெற உள்ளது.

இதற்காக 33 வீராங்கனைகள் கொண்ட அணி அறிவிக்கப்பட்டு உள்ளது. இதுபற்றி தலைமை பயிற்சியாளர் ஜோயர்டு மரீஜ்னி கூறும்பொழுது, உள்ளூர் போட்டிகளில் சிறந்த முறையில் விளையாடிய இளம் வீராங்கனைகள் சிலர் அணியில் சேர்க்கப்பட்டு உள்ளனர்.  அவர்களை தவிர மற்ற அனைவரும் முன்பு அணியில் இருந்தவர்களே ஆவர். இளையோர் ஒலிம்பிக் போட்டிகளில் நன்றாக விளையாடியவர்களும் நமது அணியில் உள்ளனர் என கூறியுள்ளார்.

அணி வீராங்கனைகள் விவரம்

கோல்கீப்பர்கள்:
சவீதா, ரஜனி எதிமரபு மற்றும் சோனல் மின்ஜ்.
தடுப்பு ஆட்டக்காரர்கள்:
தீப் கிரேஸ், சுனிதா லக்ரா, சுசீலா சானு, குர்ஜீத் கவுர், ரஷ்மிதா மின்ஜ், சுமன் தேவி, மகிமா சவுத்ரி, நிஷா மற்றும் சலீமா தெட்டே.
நடுகள வீராங்கனைகள்:
நிக்கி பிரதான், மோனிகா, லில்லிமா மின்ஜ், நமீதா தோப்போ, நேஹா கோயல், உதித்தா, ஜோதி, அனுஜா சிங், சியாமா தித்கம், சோனிகா மற்றும் கரீஷ்மா யாதவ்.
முன்கள வீராங்கனைகள்:
ராணி, லால்ரெம்சியாமி, நவ்னீத் கவுர், நவ்ஜோத் கவுர், ரஜ்வீந்தர் கவுர், வந்தனா கட்டாரியா, அனுபா பர்லா, பிரியங்கா வாங்கடே, ரீனா கோகர் மற்றும் லீலாவதி மல்லமடா.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து