முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

செய்தியாளர் கஷோகியின் உடல் கழிவு நீருடன் வெளியேற்றம்? துருக்கி ஊடகங்கள் அதிர்ச்சித் தகவல்

ஞாயிற்றுக்கிழமை, 11 நவம்பர் 2018      உலகம்
Image Unavailable

அங்காரா,துருக்கியிலுள்ள சவுதி தூதரகத்தில் கொலை செய்யப்பட்ட செய்தியாளர் கஷோகியின் உடல், திரவத்தில் கரைக்கப்பட்டு, கழிவு நீருடன் வெளியேற்றப்பட்டிருக்கலாம் என்று துருக்கி ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இதுகுறித்து அந்த நாட்டிலிருந்து வெளியாகும் சாபா நாளிதழ் வெளியிட்டுள்ள செய்தியில், இஸ்தான்புலில் உள்ள சவுதி அரேபிய துணைத் தூதரகத்தில் கொல்லப்பட்ட செய்தியாளர் கஷோகியின் உடல், துண்டு துண்டாக வெட்டப்பட்டதாகவும், பிறகு அது அமிலத்தில் கரைக்கப்பட்டதாகவும் அதிகாரிகள் ஏற்கெனவே தெரிவித்துள்ளனர். தற்போது புதிதாகக் கிடைத்துள்ள தகவலின்படி, அமிலத்தில் கரைக்கப்பட்ட கஷோகியின் உடல் கழிவு நீருடன் கலந்து வெளியேற்றப்பட்டதாகத் தெரியவந்துள்ளது.சவுதி துணைத் தூதரகத்தின் கழிவு மாதிரிகளை சேகரித்து அதிகாரிகள் சோதனை செய்தபோது, அதில் அமிலங்கள் இருந்தது கண்டறியப்பட்டது.எனவே, கஷோகியின் கரைக்கப்பட்ட உடல், அந்த கழிவுகளுடன் சேர்த்துவெளியேற்றப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது என்று அந்த நாளிதழ் தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து