முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தெலுங்கானா சட்டசபை தேர்தலில் போட்டியில்லை ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் முடிவு

ஞாயிற்றுக்கிழமை, 11 நவம்பர் 2018      இந்தியா
Image Unavailable

ஐதராபாத்,தெலங்கானா சட்டப் பேரவைத் தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என்று ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளது.

அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில், ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் முழுமையாக கவனம் செலுத்த இருப்பதால், இந்த முடிவை எடுத்துள்ளதாக அக்கட்சி தெரிவித்துள்ளது.கடந்த 2014-ம் ஆண்டு நடைபெற்ற தெலுங்கானா சட்டசபை தேர்தலில் 3 இடங்களிலும், மக்களவைத் தேர்தலில் ஒரு தொகுதியிலும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. அந்த 3 எம்.எல்.ஏ.க்களும் பிறகு ஆளும் தெலுங்கானா ராஷ்டிர சமீதி கட்சிக்கு தாவி விட்டனர். இந்நிலையில், தெலுங்கானா சட்டசபை தேர்தல், டிசம்பர் 7-ம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி, ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் மத்திய குழுக் கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது.

அந்தக் கூட்டத்துக்குப் பிறகு வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-தெலுங்கானாவில் கடந்த நான்கரை ஆண்டுகளாக நடந்த நிகழ்வுகளைக் கணக்கில் கொண்டு, அடுத்த மாதம் நடைபெறவுள்ள பேரவைத் தேர்தலில் போட்டியிடுவதில்லை என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் ஆந்திரத்தில் முழுமையாக கவனம் செலுத்த வேண்டும் என்பதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டது. அதேநேரத்தில், தெலங்கானாவில் வரும் 2023-ஆம் ஆண்டு நடைபெறும் பேரவைத் தேர்தலில் போட்டியிடுவதற்குத் தயாராகும் வகையில் கட்சியை வலுப்படுத்துவதற்கான பணிகள் முன்னெடுக்கப்படும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து