முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குரூப்–2 தேர்வு: தமிழகம் முழுவதும் 2268 மையங்களில் 6 லட்சம் பேர் எழுதினார்கள்

ஞாயிற்றுக்கிழமை, 11 நவம்பர் 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை,தமிழகம் முழுவதும் நேற்று நடைபெற்ற குரூப் 2 தேர்வை, 2268 மையங்களின் மூலம் சுமார் 6 லட்சம் பேர் எழுதினார்கள். தேர்வு மையங்களை மாவட்ட கலெக்டர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.நகராட்சி ஆணையர், சார் பதிவாளர், தொழிலாளர் நலத் துறையின் உதவி ஆய்வாளர், உதவி பிரிவு அலுவலர், சிறைத் துறை அதிகாரி, இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், உள்ளாட்சி தணிக்கை உதவி ஆய்வாளர், கைத்தறி ஆய்வாளர், கூட்டுறவுச் சங்கங்களின் முதுநிலை ஆய்வாளர் உள்ளிட்ட பல்வேறு குரூப் 2 பதவிகளுக்கான 1,199 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை, கடந்த ஆகஸ்ட் 10ஆம் தேதியன்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டது.

செப்டம்பர் 9ஆம் தேதி வரை இதற்கு விண்ணப்பித்து வந்தனர் தேர்வர்கள்.நேற்று காலை 10 மணி முதல் 1 மணி வரை இந்த குரூப் 2 தேர்வு நடைபெற்றது.சென்னை, கோவை, திருச்சி, மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களில் 2,268 தேர்வு மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. சுமார் 6.22 லட்சம் பேர் இந்தத் தேர்வைஎழுதினார்கள்.இவர்களில் 3 லட்சத்து 54 ஆயிரத்து 136 பேர் ஆண்கள்; 2 லட்சத்து 72 ஆயிரத்து 357 பேர் பெண்கள். 10 பேர் மூன்றாம் பாலினத்தவர்.சென்னையில் மட்டும் 248 தேர்வு மையங்களில் இத்தேர்வு நடைபெற்றது. தேர்வு கண்காணிப்புப் பணியில் மட்டும் சுமார் 6,000 ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.தேர்வு மையத்துக்குள் செல்போன், கால்குலேட்டர் போன்ற மின்னணுச் சாதனங்களுக்கு அனுமதியில்லை. தேர்வு மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து