முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அவ்னி புலி கொல்லப்பட்டது குறித்த விசாரணைக் குழு கேலிக்கூத்தானது - உத்தவ்தாக்கரே கிண்டல்

ஞாயிற்றுக்கிழமை, 11 நவம்பர் 2018      இந்தியா
Image Unavailable

மும்பை : மகாராஷ்டிர மாநிலத்தில் "அவ்னி' என்ற ஆட்கொல்லி புலி கொல்லப்பட்டது குறித்து, அரசு அமைத்துள்ள விசாரணைக் குழு கேலிக்கூத்தானது என்று ஆளும் பா.ஜ.க. கூட்டணியில் உள்ள சிவசேனை கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிர மாநிலம், யுவத்மால் மாவட்டத்தில் கடந்த 2 ஆண்டுகளில் 13 பேர் பலியானதற்கு காரணமானதாகக் கருதப்பட்ட அவ்னி என்ற பெண் புலியை பிடித்து முகாமில் அடைக்க மாநில அரசு திட்டமிட்டது. இதற்காக குழு ஒன்று அமைக்கப்பட்டது.

அந்தக் குழு புலியை பிடிக்க முற்பட்டபோது, துப்பாக்கி குண்டுகள் பாய்ந்து பலியானது. வன ஊழியர்களை தாக்க முற்பட்டதாலேயே புலியை சுட்டுக் கொல்வது தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டதாக மாநில அரசு விளக்கம் அளித்தது. இருப்பினும், எதிர்க்கட்சிகள் மற்றும் விலங்கு நல ஆர்வலர்களிடம் இருந்து, புலி சுட்டுக் கொல்லப்பட்டதற்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. இந்நிலையில், அவ்னி கொல்லப்பட்டது குறித்து விசாரிக்க வனத்துறை நிபுணர்கள் உள்பட நால்வர் அடங்கிய விசாரணைக் குழுவை மகாராஷ்டிர அரசு அமைத்தது. புலியை சுட்டுக் கொல்வதற்கு முன், முறையான விதிகளும், தடுப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டதா என்று ஆய்வு செய்து அந்தக் குழு அறிக்கை அளிக்கவுள்ளது.

இந்நிலையில், அவ்னியை கொலை செய்யும் பணி யாரிடம் ஒப்படைக்கப்பட்டதோ, அதே நபர்களை விசாரணைக் குழுவின் உறுப்பினர்களாக நியமித்திருப்பது மிகவும் கேலிக்கூத்தானது என்று உத்தவ் தாக்கரே கூறியுள்ளார்.

இதற்கு மாநில வனத்துறை அமைச்சர் சுதிர் முகந்திவார் பதிலடி கொடுத்துள்ளார். விசாரணைக் குழு கேலிக்கூத்தானது என்றால், உத்தவ் தாக்கரே விரும்பினால் அவரது தலைமையில் மற்றொரு விசாரணைக் குழுவை அமைக்க அரசு தயாராக உள்ளது என்றார் அவர்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து