முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராமஜென்ம பூமியில் புத்தருக்கு சிலை அமைக்க வேண்டும்: பா.ஜ.க. எம்.பி

ஞாயிற்றுக்கிழமை, 11 நவம்பர் 2018      இந்தியா
Image Unavailable

கோண்டா : அயோத்தியில் உள்ள ராமஜென்ம பூமியில் புத்தருக்கு சிலை அமைக்கப்பட வேண்டும் என்று பா.ஜ.க. தலித் எம்.பி. சாவித்ரிபாய் புலே வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக உத்தரப் பிரதேச மாநிலம், கோண்டாவில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

உயர்நீதிமன்ற உத்தரவுப்படி, அயோத்தியில் நடைபெற்ற அகழாய்வு பணியின்போது, அந்த இடத்துக்கும் புத்தருக்கும் தொடர்பு இருப்பதை உறுதிப்படுத்தக்கூடிய பொருள்கள் கிடைத்தன. நமது பாரத நாடு, புத்தரின் நாடாகும். அதேபோல் அயோத்தியும் புத்தரின் இடமாகும் என்பதை தெளிவாக தெரிவித்து கொள்கிறேன். இதை கருத்தில் கொண்டு, அங்கு புத்தருக்கு கோயில் கட்ட வேண்டும் என்பதை வலியுறுத்துகிறேன்.

அயோத்தியில் ராமருக்கு கோயில் கட்டக்கோரி, நாடாளுமன்றத்தில் தனிநபர் மசோதா கொண்டு வரப் போவதாக பா.ஜ.க. எம்.பி. ராகேஷ் சின்ஹா தெரிவித்துள்ளார். இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்படி, நமது நாடானது மதச்சார்பற்ற நாடாகும். அதேபோல், அரசியலமைப்பு சட்டத்தில் அனைத்து மதத்தினருக்கும் சம உரிமை அளிக்கப்பட்டுள்ளது. நமது அரசியலமைப்பு சட்டத்தின்படிதான், நாடு ஆட்சி செய்யப்பட வேண்டும் என்றார் புலே.

உத்தரப் பிரதேச மாநிலம், அயோத்தியில் உள்ள ராமஜென்ம பூமியில் ராமருக்கு பிரமாண்ட கோயில் கட்டப்பட வேண்டும் என்று ஆர்எஸ்எஸ், வி.எச்.பி உள்ளிட்ட ஹிந்து அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன. பா.ஜ.க. எம்.பி.க்கள், மத்திய அமைச்சர்கள் சிலரும், இக்கோரிக்கையை ஆதரித்து வருகின்றனர்.

இந்நிலையில், பா.ஜ.க. எம்.பி.யான சாவித்ரிபாய் புலே, அயோத்தியில் உள்ள ராமஜென்ம பூமியில் புத்தருக்கு சிலை அமைக்கப்பட வேண்டும் என்று  கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து