முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சாத்தூர் தொகுதியில் கிராமம் கிராமமாக சென்று பொதுமக்களை சந்தித்து மனுக்கள் வாங்கிய அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி

ஞாயிற்றுக்கிழமை, 11 நவம்பர் 2018      விருதுநகர்
Image Unavailable

சாத்தூர், - சாத்தூர் தொகுதியில் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி கிராமம் கிராமமாக சென்று பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டரிந்து மனுக்கள் வாங்கினார்.
விருதுநகர் மாவட்டத்தில் அனைத்து சட்டமன்ற தொகுதியிலும் தமிழக பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டரிந்து மனுக்கள் வாங்கி வருகின்றார். ஏராளமான கஷ்டபடும் குடும்பங்களுக்கு அரசு உதவியோடு தனது சொந்த நிதியையும் வழங்கி உதவி செய்து வருகின்றார். கடந்த சில வாரங்களுக்கு முன்பு சிவகாசி, திருவில்லிபுத்தூர், ராஜபாளையம், திருச்சுழி, விருதுநகர், அருப்புக்கோட்டை  சட்டமன்ற தொகுதிகளில் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி கிராமம் கிராமமாக சென்று பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டரிந்து மனுக்கள் வாங்கினார். தொடர்ந்து சாத்தூர் தொகுதியில் டி.கரிசல்குளம், பந்தூவார்பட்டி, எதிர்கோட்டை, சாத்தூர் நகர் உட்பட பல்வேறு பகுதிகளி்ல் பொதுமக்களை சந்தித்து அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி மனு வாங்கினார். முதியோர் உதவித்தொகை, பட்டா மாறுதல், மாற்றுத்திறனாளிகக்கு உதவித்தொகை, திருமண உதவித்தொகை. இலவச வீ்ட்டுமனை பட்டா, மின்விளக்கு வசதி, சாலை வசதி, வாறுகால் வசதி உட்பட பல்வேறு கோரிக்கை சம்பந்தமாக அமைச்சரிடம் பொதுமக்கள் மனுக்கள் கொடுத்தனர். பொதுமக்களின் கோரிக்கைகளை  கேட்டரிந்த அமைச்சர் அவர்கள் கொடுக்கும் மனுக்களை பெற்றுக்கொண்டார். பொதுமக்கள் மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பேசி விரைந்து நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டார். பொதுமக்கள் தொடர்ந்து அதிமுக அரசிற்கு ஆதரவு கொடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். நிகழ்ச்சிகளில் ராதாகிருஷ்ணன் எம்பி, சந்திரபிரபா எம்எல்ஏ, வெம்பக்கோட்டை ஒன்றிய செயலாளர்கள் எதிர்கோட்டை மணிகண்டன், ராமராஜ், சாத்தூர் ஒன்றிய செயலாளர்கள் சண்முகக்கனி, தேவதுரை, மாவட்ட எம்ஜிஆர் இளைஞரணி செயலாளர் எம்.எஸ்.ஆர்.ராஜவர்மன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப செயலாளர் பாண்டியராஜன் மற்றும் கட்சியின் பல்வேறு சார்பு அணி நிர்வாகிகள் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து