முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொச்சி விமான நிலையத்தில் பயணியின் பையில் பாம்பு

திங்கட்கிழமை, 12 நவம்பர் 2018      இந்தியா
Image Unavailable

திருவனந்தபுரம்,கொச்சி விமான நிலையத்தில் இருந்து அபுதாபி செல்வதற்காக வந்த வெளிநாடு வாழ் இந்தியர் கொண்டு வந்த காய்கறி பையில் விஷ பாம்பு இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக அவரை பிடித்து விசாரணைக்காக போலீசார் அழைத்துச் சென்றதால் வெளிநாடு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

கேரள மாநிலம் பாலக்காட்டைச் சேர்ந்த சுனில் (வயது 40) அபுதாபியில் பணியாற்றி வருகிறார். விடுமுறைக்காக சொந்த ஊர் வந்த அவர் நேற்று முன்தினம் அபுதாபி செல்வதற்காக கொச்சி விமான நிலையம் வந்தடைந்தார். விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகள் அவரது பைகளை சோதனையிட்ட போது காய்கறிகள் வைத்திருந்த பையில் இருந்து விஷ பாம்பு ஒன்று வெளியேறி ஓடியது. இதனால் சுங்கத்துறை அதிகாரிகள் பதற்றமடைந்தனர்.உடனடியாக தொழிலக பாதுகாப்புபடையினர் அங்கு விரைந்து வந்து அந்த பாம்பை அடித்துக் கொன்றனர். பின்னர் சுனிலை அழைத்துச் சென்ற போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர். தனது சொந்த ஊரில் விவசாயி ஒருவர் சீனா காய்கறிகள் பயிரிட்டு வருவதாகவும், வயலுக்கே நேரடியாக சென்று காய்கறிகளை வாங்கி பையில் நிரப்பியதாகவும், அப்போது பாம்பு பைக்குள் வந்திருக்கலாம் எனவும் அவர் கூறினார். இதையடுத்து அவரை காவல் நிலையம் அழைத்துச் சென்ற போலீசார் மேல் விசாரணை நடத்திவருகின்றனர். இதனிடையே அபுதாபி செல்ல வேண்டிய விமானம் புறப்பட்டுச் சென்றதால் அதில் அவர் பயணம் செய்ய முடியவில்லை. விசாரணை முடிந்த பிறகே அவர் விடுவிக்கப்படுவார் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து