முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அம்மாவை மீட்டு தாருங்கள்! காடுவெட்டி குருவின் மகன் வீடியோவால் பரபரப்பு

திங்கட்கிழமை, 12 நவம்பர் 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை,என் அம்மாவை சொந்தக்காரங்க கிட்ட இருந்து எப்படியாவது மீட்டு தந்து விடுங்கள் என்று மறைந்த காடுவெட்டி குருவின் மகன் கனலரசன் ஒரு பரபரப்பான வீடியோவை வெளியிட்டுள்ளார்.மறைந்த காடுவெட்டி குருவின் மனைவி சொர்ணலதா கையெழுத்திட்ட கடிதம் ஒன்று கடந்த 2 நாட்களுக்கு முன்பு இணையத்தில் வேகமாக பரவியது. ஆனால் எங்க அம்மாவுக்கு எழுத படிக்கவே தெரியாது என்றும், அந்த கடிதமே பொய் என்றும் காடுவெட்டி குருவின் மகன் கனலரசன் தெரிவித்துள்ளார். இது சம்பந்தமாக வீடியோ ஒன்றையும் அவர் வெளியிட்டு, பா.ம.க. நிறுவனர் ராமதாசுக்கு கோரிக்கையும் விடுத்துள்ளார். இவ்வாறு அவர் வீடியோவில் பேசி உள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து