முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாக். - நியூசிலாந்து ஆட்டம் மழையால் ரத்து

திங்கட்கிழமை, 12 நவம்பர் 2018      விளையாட்டு
Image Unavailable

பாகிஸ்தான்-நியூசிலாந்து அணிகள் மோதிய 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி துபாயில் நேற்று முன்தினம் பகல்-இரவாக நடந்தது. முதலில் விளையாடிய பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 279 ரன் குவித்தது. பாபர் ஆசம் 92 ரன்னும், பஹர்ஜமான் 65 ரன்னும், ஹாரிஸ் சோகைல் 60 ரன்னும் எடுத்தனர். பெர்குசன் 5 விக்கெட் வீழ்த்தினார். பின்னர் விளையாடிய நியூசிலாந்து 6.5 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 35 ரன் எடுத்து இருந்தபோது மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டது. இதனால் ஆட்டம் பாதியில் ரத்து செய்யப்பட்டது. எனவே ஒருநாள் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் முடிந்தது. 20 ஓவர் தொடரை பாகிஸ்தான் 3-0 என்ற கணக்கில் ஏற்கனவே கைப்பற்றி இருந்தது. இரு அணிகள் இடையேயான 3 டெஸ்ட் தொடரில் முதல் டெஸ்ட் அபுதாபியில் வருகிற 16-ந்தேதி தொடங்குகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து