முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தாயிடம் இருந்து பச்சிளங்குழந்தையை பறித்து சென்ற குரங்கு கடித்து கொன்றது

செவ்வாய்க்கிழமை, 13 நவம்பர் 2018      இந்தியா
Image Unavailable

ஆக்ரா,உத்தரப்பிரதேச மாநிலம், ஆக்ராவில் பாலூட்டிக் கொண்டிருந்த தாயிடம் இருந்து பிறந்து 12 நாட்கள் மட்டுமே நிறைந்த பச்சிளங்குழந்தையை பறித்துச் சென்ற குரங்கு, அவர் முன்பு கடித்துக் கொன்றது.

ஆக்ரா நகர் விஜய நகர் மொஹல்லா கச்சேரா பகுதியில் பகுதியில் குரங்குகள் தொல்லை மிகவும் அதிகமாக உள்ளது. இதனால், வீடுகளில் ஜன்னல் வழியாகப் புகும் குரங்குகள் வீட்டில் இருக்கும் பொருட்களை உணவுப்பொருட்களை எடுத்துச் சென்று விடுகின்றன. இந்நிலையில் இப்பகுதியைச் சேர்ந்த சன்னி என்ற பெண் நேற்று முன்தினம் மாலை வீட்டு வாசலில் அமர்ந்து பிறந்து 12 நாட்களேயான தனது பச்சிளங் குழந்தைக்கு பாலூட்டிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென வந்த குரங்கு ஒன்று, சன்னியிடம் இருந்து அவரின் பச்சிளங் குழந்தையை பறித்துக் கொண்டு ஓடியது. இதனால் செய்வதறியாது சன்னி திகைத்து கூச்சலிட்டார்.

அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ஓடி வந்து, அந்தக் குரங்கை துரத்திச் சென்றனர். ஆனால், யாருடைய கைகளிலும் சிக்காமல் குழந்தையைக் தூக்கிக் கொண்டு ஓடிய குரங்கு பல்வேறு இடங்களுக்குத் தாவியது. இதனால், சன்னியும், அவரின் குடும்பத்தினரும் செய்வதறியாது திகைத்து கண்ணீர் விட்டனர்.இந்நிலையில், சன்னியின் வீட்டுக்கு அருகே உள்ள வீட்டின் மாடியின் ரத்தக்கறையுடன் குழந்தை கிடப்பதை அப்பகுதி மக்கள் கண்டனர். உடனடியாக குழந்தையை தூக்கிக் கொண்டு மருத்துவமனைக்குச் சென்றனர். ஆனால், குழந்தையைப் பரிசோதனை செய்த மருத்துவர், குழந்தையைக் குரங்கு கடித்ததால், ரத்தம் அதிகமாக வெளியேறி இறந்து விட்டதாகத் தெரிவித்தார். இதையடுத்து சன்னியும், அவரின் குடும்பத்தினரும் கண்ணீர்விட்டுக் கதறினார்கள். விஜயநகர் பகுதியில் அதிக அளவில் சுற்றித்திரியும் குரங்குகளைப் பிடித்து வனப்பகுதியில் விட அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 3 days ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 weeks ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 6 months 4 weeks ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 7 months 3 weeks ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து