முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெட்ரோல் விலை 14 காசுகள் குறைவு டீசல் விலையும் குறைந்தது

செவ்வாய்க்கிழமை, 13 நவம்பர் 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை,பெட்ரோல் விலை லிட்டருக்கு 14 காசுகள் குறைவு, டீசல் விலையும் குறைந்துள்ளது வாகன ஓட்டிகளுக்கு ஆறுதலை அளித்துள்ளது.

ஏற்ற, இறக்கம்....கிடுகிடு’வென உயர்ந்து வாகன ஓட்டிகளை பீதியடைய செய்த பெட்ரோல் - டீசல் விலை, கடந்த மாதத்தின் தொடக்கத்தில் இருந்து ஏற்ற இறக்கத்தை சந்திக்க தொடங்கியது. கடந்த மாதம் 17-ம் தேதி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 86.10-க்கும், டீசல் ரூ. 80.04-க்கும் விற்பனை ஆனது. அதனைத் தொடர்ந்து பெட்ரோல்-டீசல் விலை கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருகிறது.

விலை குறைவு....சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் நேற்று முன்தினம்  80.56 ஆகவும், டீசல் விலை ரூ. 76.43-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில், நேற்று முன்தின விலையில் இருந்து பெட்ரோல் 14 காசுகள் குறைந்து நேற்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 80.42 ஆகவும், டீசல் லிட்டருக்கு 13 காசுகள் குறைந்து, ரூ.76.30 ஆகவும் விற்பனையானது. தொடர்ந்து  27-வது நாளாக பெட்ரோல், டீசல் விலை குறைவை சந்தித்து வருகிறது. கடந்த 27 நாட்களில் பெட்ரோல் விலை ரூ. 5.68 -ம், டீசல் விலை ரூ.3.74-ம், குறைந்துள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து