முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

'இனி அமைதிக்கான அடையாளம் நீங்களல்ல' ஆங் சான் சூச்சியிடம் இருந்து விருது பறிப்பு !

செவ்வாய்க்கிழமை, 13 நவம்பர் 2018      உலகம்
Image Unavailable

ரங்கூன்,ஆங் சான் சூச்சிக்கு தாங்கள் வழங்கிய 'நம்பிக்கைக்கான அடையாளம்' என்ற விருதினை திரும்ப பெறுவதாக அம்னிஸ்டி இன்டர்நேஷனல் எனும் பன்னாட்டுப் பொது மன்னிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.

நோபல் பரிசு...உலக மக்களால் ஜனநாயகப் போராளியாக அறியப்படுபவர் மியான்மரின் அரசுத் தலைவர் ஆங் சான் சூச்சி. 1990-களில் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருந்த அவர் அமைதியின் அடையாளமாகவே கருதப்படுகிறார். அதற்காகவே அமைதிக்கான நோபல் பரிசு அவருக்கு வழங்கப்பட்டது. அவர் ஆட்சிக்கு வந்தால், மியான்மரின் அனைத்து அடக்குமுறைகளும் முடிவுக்கு வரும் என்று அனைத்துத் தரப்பினரும் நம்பினார்கள். ஆனால், ரோஹிங்யா எனப்படும் இஸ்லாமிய சமூகத்தினர் மீது கட்டவிழ்த்து விடப்படும் வன்முறைகளை அவர் கண்டுகொள்ளவில்லை என்ற குற்றம்சாட்டப்பட்டது. ஊடகங்களையும் அவர் புறக்கணிப்பதாகக் கூறப்பட்டது.

உடன்பாடு இல்லை....இந்நிலையில் ஆங் சான் சூச்சிக்கு தாங்கள் வழங்கிய 'நம்பிக்கைக்கான அடையாளம்' என்ற விருதினை திரும்ப பெறுவதாக அம்னிஸ்டி இன்டர்நேஷனல் எனும் பன்னாட்டுப் பொது மன்னிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து அந்த அமைப்பு ஆங் சான் சூச்சிக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. அதில் 9 வருடங்களுக்கு முன்னர் அம்னிஸ்டி இன்டர்நேஷனல் அமைப்பின் உயரிய விருதான 'நம்பிக்கைக்கான அடையாளம்' என்ற விருதினை உங்களுக்கு வழங்கியது. உங்களின் அடையாளமாக கருதப்பட்ட அமைதியும், சேவை மனப்பான்மையும் தொடரும் என்று நம்பினோம். ஆனால் சமீக காலங்களில் உங்களின் செயல்பாடுகளில் எங்களுக்கு உடன்பாடு ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 3 days ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 weeks ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 6 months 4 weeks ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 7 months 3 weeks ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து