முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

'நியூஸ் ஜெ' தொலைக்காட்சி துவக்கவிழா: சென்னையில் இன்று இ.பி.எஸ். ,ஓ.பி.எஸ். துவக்கி வைக்கின்றனர்

செவ்வாய்க்கிழமை, 13 நவம்பர் 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை,நியூஸ் ஜெ தொலைக்காட்சியை துவக்கவிழா இன்று சென்னையில் நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கலந்து கொண்டு புதிய தொலைக்காட்சியை தொடங்கி வைக்கின்றனர்.

அ.தி.மு.க. இணைப்புக்கு பின்னர் நமது புரட்சித்தலைவி அம்மா தொடங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து புதிய தொலைக்காட்சி தொடங்கும் பணிகளுக்கு வித்திடப்பட்டது. அதற்கு முன்னோட்டமாக நியூஸ் ஜெ என்றழைக்கப்படும் இணையதளமும் சென்னை கலைவாணர் அரங்கில் சிலநாட்களுக்கு முன்னர் தொடங்கிவைக்கப்பட்டது. இதனை முதல்வரும், அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வரும், அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வமும் தொடங்கிவைத்தனர்.இதைத்தொடர்ந்து நியூஸ் ஜெ தொலைக்காட்சியின் தொடக்க விழா இன்று மாலை சென்னையில் உள்ள நேரு ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. இந்த விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் கலந்து கொண்டு நியூஸ் ஜெ தொலைக்காட்சியை தொடங்கிவைக்கின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து