முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பட்டாசு உரிமையாளர்களுடன் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேச்சு வார்த்தை

செவ்வாய்க்கிழமை, 13 நவம்பர் 2018      விருதுநகர்
Image Unavailable

சிவகாசி,  - பட்டாசு ஆலை உரிமையாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தை முடிவிற்கு கொண்டு வரும் வகையில் பட்டாசு ஆலை உரிமையாளர்களுடன் பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி நேற்று இரவு 2மணி நேரத்திற்கு மேலாக பேச்சு வார்த்தை நடத்தினார்.
பட்டாசு ஆலை உரிமையாளர்கள் பட்டாசு ஆலைகளை மூடிவிட முடிவு செய்துள்ளனர். இதனால் பல லட்சம் பட்டாசு தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டது. அதனை தொடர்ந்து நேற்று இரவு பட்டாசு  ஆலை உரிமையாளர்களுடன் பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது செய்தியாளர்களிடம் அமைச்சர் தெரிவித்ததாவது,
பட்டாசு வழக்கில் நீதிமன்ற உத்தரவால் விருதுநகர் மாவட்ட மக்கள் சிரமத்தை சந்திக்ககூடிய நிலை ஏற்பட்டுள்ளது. இதை எப்படி சரி செய்வது என்று பட்டாசு ஆலை உரிமையாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினோம். பிரச்சனைக்கு தீர்வு காணாமல் பட்டாசு ஆலைகளை திறப்பதில்லை என்று பட்டாசு ஆலை உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளனர். பட்டாசு தொழிலை பாதுகாக்க தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி எவ்வாறு நடவடிக்கை எடுத்தார், எப்படி சட்ட போராட்டம் நடத்தினார் என்று பட்டாசு ஆலை உரிமையாளர்களுக்கு நன்றாக தெரியும். இந்திய அளவில் பட்டாசு வெடிக்க தடையில்லை என்ற உச்சநீதிமன்ற உத்தரவிற்கு காரணம் தமிழ்நாடு முதலமைச்சர் எடுத்த நடவடிக்கைதான். தமிழக அரசு என் முன் வந்து நிற்பதால் பட்டாசு வெடிக்க தடையில்லை என்று  உச்சநீதிமன்ற தீர்ப்பில் நீதிபதிகள் கூறிப்பிட்டுள்ளனர். பட்டாசுகளை வெடிக்க தடையில்லை என்ற உத்தரவை மனம்முகந்து ஏற்றுக்கொண்டு தமிழக முதலமைச்சருக்கு சிவகாசி பட்டாசு உரிமையாளர்கள் நன்றியும் தெரிவித்தனர். ஆனால் தீர்ப்புக்குள் சில சட்ட விதிகள் பேரியம் நைட்ரேட் போன்ற வேதி பொருட்கள் தடை செய்யப்பட்டுள்ளதால் 60சதவிகிதம் பட்டாசு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. சரவெடி தயாரிப்பு, நூல் மூலமாக செய்யும் வெடிகளுக்கு தடை செய்யப்பட்டுள்ளதால் பட்டாசு தொழில் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்சனை குறித்து தமிழ்நாடு முதலமைச்சரை  நேரடியாக சென்று வலியுறுத்த உள்ளோம். விருதுநகர் மாவட்டத்தில் சுமார் 1070 பட்டாசு தொழிற்சாலைகள் உள்ளன. இந்த ஆலைகளில் நேரடியாக 10லட்சம் தொழிலாளர்களும்,. மறைமுகமாக 1கோடி பேரும் பணியாற்றி வருகின்றனர். பட்டாசு ஆலைகள் மூடினால் தொழிலாளர்கள் பாதிக்கப்படுவார்கள். பட்டாசு தொழிலை பாதுகாக்க தமிழ்நாடு முதலமைச்சர் தொடர்ந்து நடவடிக்கை எடுப்பார்.  பசுமை பட்டாசு என்றால் என்ன என்று எந்த அதிகாரிகளும் விளக்கம் கொடுக்கவில்லை. இதனால் மீண்டும் உச்சநீதிமன்றத்தை நாட முடிவு செய்துள்ளோம். பட்டாசு ஆலைகளை மூடும் நிலைக்கு பட்டாசு ஆலைகள் உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளனர். ஜல்லிக்கட்டு போராட்டத்தைவிட பட்டாசு பிரச்சனையில் எடப்பாடி பழனிச்சாமி மல்லுக்கட்டுவார். போர்க்குணத்தோடு தமிழ்நாடு முதலமைச்சர் நடவடிக்கை எடுப்பார். பட்டாசு ஆலைகளை விரைவில் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும்.  எந்த மதமாக இருந்தாலும் அந்த மதங்களில் வழிபாடு மாற்றம் செய்வதை எந்த மதத்தினறும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ஆயிரம் ஆண்டு காலம் வழிபாடு முறையை மாற்றம் செய்வதில் எனக்கு உடன்பாடு கிடையாது என்று தெரிவித்தார்.
படம் விளக்கம், சிவகாசியில் பட்டாசு ஆலை உரிமையாளர்களிடம் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேச்சு வார்த்தை நடத்தினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து