முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இலங்கைக்கு எதிரான 2-வது டெஸ்ட் இன்று தொடக்கம்: தொடரை கைப்பற்றும் முனைப்பில் இங்கிலாந்து அணி

செவ்வாய்க்கிழமை, 13 நவம்பர் 2018      விளையாட்டு
Image Unavailable

பல்லேகெலே : இலங்கை - இங்கிலாந்து இடையிலான 2-வது டெஸ்ட் இன்று பல்லேகெலேயில் தொடங்குகிறது. தொடரை கைப்பற்றும் முனைப்பில் இங்கிலாந்து களம் இறங்குகிறது.

முதல் டெஸ்டில்...

இங்கிலாந்து கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. ஒருநாள் தொடரை இங்கிலாந்து 3-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இதேபோல ஒரே ஒரு 20 ஓவர் ஆட்டத்திலும் அந்த அணியே வெற்றி பெற்றது. 3 போட்டிகள் கொண்ட டிடெஸ்ட் தொடரில் கொழும்பில் நடந்த முதல் டெஸ்டிலும் இங்கிலாந்து 211 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

சன்டிமால் காயம்

இங்கிலாந்து- இலங்கை அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் போட்டி பல்லேகெலேயில் இன்று தொடங்குகிறது. இந்த டெஸ்டிலும் வென்று தொடரை வெல்லும் ஆர்வத்தில் இங்கிலாந்து இருக்கிறது. இலங்கை அணி பதிலடி கொடுத்து சமன் செய்யும் வேட்கையில் உள்ளது. அந்த அணி கேப்டன் சன்டிமால் காயத்தால் இதில் ஆடவில்லை.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து