முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

13-க்கும் மேற்பட்ட ரகசிய இடங்களில் அணு ஆயுத ஏவுகணைகளை பாதுகாத்து வரும் வடகொரியா அமெரிக்க ஆய்வு அமைப்பு தகவல்

புதன்கிழமை, 14 நவம்பர் 2018      உலகம்
Image Unavailable

வாஷிங்டன் : அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் திறன் கொண்ட ஏவுகணைகளை வட கொரியா 13-க்கும் மேற்பட்ட இடங்களில் ரகசியமாகப் பாதுகாத்து வருவதாக அமெரிக்க பாதுகாப்பு ஆய்வு அமைப்பு தெரிவித்துள்ளது.

இது குறித்து, அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் செயல்படும் பாதுகாப்பு மற்றும் சர்வதேச விவகார ஆய்வு அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

அணு ஆயுதங்களைக் கைவிடுவதாக வட கொரிய அதிபர் கூறி வந்தாலும், அத்தகைய ஆயுதங்களை ஏந்தித் தாக்குதல் நடத்தும் திறன் கொண்ட ஏவுகணைகளை அந்த நாடு பாதுகாத்து வருகிறது. அத்தகைய ஏவுகணை மையங்கள் எதுவும் மூடப்படவில்லை. சுமார் 13 இடங்களில் வட கொரியாவின் அணு ஆயுத ஏவுகணை மையங்கள் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றன. இந்த எண்ணிக்கை 20 வரை கூட இருக்கலாம் என்று அந்த ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து