முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தெலுங்கானா சட்டசபை தேர்தலில் பிங்க் வண்ணத்தை பயன்படுத்துவதில் டி.ஆர்.எஸ்.- காங். இடையே மோதல்

புதன்கிழமை, 14 நவம்பர் 2018      இந்தியா
Image Unavailable

ஐதராபாத் : தெலுங்கானாவில் அடுத்த மாதம் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், பிங்க் வண்ணத்தைப் பயன்படுத்துவது குறித்து தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி (டிஆர்எஸ்) கட்சிக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் இடையே வார்த்தை மோதல் ஏற்பட்டுள்ளது.

டி.ஆர்.எஸ் கட்சியின் அதிகாரபூர்வ வண்ணமாக பிங்க் நிறம் இருந்து வருகிறது. அதை தேர்தலில் வாக்குச்சீட்டில் தேர்தல் ஆணையம் பயன்படுத்த எதிர்ப்பு தெரிவிக்கிறது காங்கிரஸ் கட்சி. ஆனால், காங்கிரஸ் கட்சியின் எதிர்ப்புக்கு சளைக்காத டி.ஆர்.எஸ். கட்சி தேர்தல் ஆணையம் வண்ணத்தை மாற்றக் கூடாது என்று வலியுறுத்தி வருகிறது.
தெலுங்கானா தனி மாநில கோரிக்கையை சந்திரசேகர் ராவ் தொடங்கியதில் இருந்து அவரின் கட்சிக் கொடியின் வண்ணம் பிங்க் நிறத்திலும், கார் சின்னத்தையும் வைத்துள்ளார்.

சட்டசபை தேர்தலிலும் இதே பிங்க் வண்ணத்தையும், கார் சின்னத்தையும் வெளிப்படுத்தி சந்திரசேகர் ராவ் வெற்றி பெற்றார். தேர்தல் மட்டுமல்லாமல், எந்தவிதமான பொதுக்கூட்டத்துக்கு சந்திரசேகர் ராவ் சென்றாலும் கழுத்தில் தனது கட்சியின் பிங்க் வண்ணத்தில் கைக்குட்டையை அணிந்திருப்பார். இதனால், டி.ஆர்.எஸ் கட்சியின் அங்கீகரிக்கப்பட்ட வண்ணமாக பிங்க் நிறம் இருந்து வருகிறது.

இந்நிலையில், தேர்தல் ஆணையம் சார்பில் மின்னணு வாக்கு எந்திரங்களில் ஒட்டுவதற்காக வாக்குச்சீட்டுகள் இந்த முறை பிங்க் வண்ணத்தில் அச்சிடப்பட்டுள்ளது. ஏறக்குறைய 90 லட்சம் வாக்குச்சீட்டுகள் பிங்க் வண்ணத்தில் அச்சிடப்பட்டு முடிக்கப்பட்டுள்ளன. ஆனால், பிங்க் வண்ணத்தில் சீட்டுகள் இருந்தால், அது டி.ஆர்.எஸ். கட்சிக்கு சாதகமாக இருக்கும் ஆதலால், வேறு வண்ணத்தில் மாற்ற வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி தற்போது போர்க்கொடி தூக்கியுள்ளது.

ஆனால், மாநில தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜத் குமார் கூறுகையில், தேர்தல் ஆணையம் வாக்கு எந்திரங்களில் ஒட்டுவதற்குச் சீட்டுகள் அனைத்தையும் பிங்க் நிறத்தில் இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது. ஆனால், வாக்காளர்களுக்கு வழங்கப்படும் சீட்டுகள் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப்படி வெள்ளை நிறத்தில்தான் இருக்கும். இதில் எந்தவிதமான விதிமுறை மீறலும் இல்லை எனத் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து