முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெண்ணின் வயிற்றில் ஒன்றரை கிலோ இரும்பு பொருட்கள் - அறுவை சிகிச்சை மூலம் அகற்றிய டாக்டர்கள்

புதன்கிழமை, 14 நவம்பர் 2018      இந்தியா
Image Unavailable

அகமதாபாத் : தாலி, வளையல்கள், ஆணிகள் என ஒன்றரை கிலோ இரும்பு பொருட்களை மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணின் வயிற்றில் இருந்து மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றினர்.

மகராஷ்டிர மாநிலம் ஷீரடியை சேர்ந்த 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் குஜராத் மாநிலம் அகமதாபாத் வீதிகளில் சுற்றி திரிந்தார். அவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர். அங்கு இயங்கி வரும் மனநல மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து அங்குள்ள மருத்துவர்கள் இந்த பெண்ணுக்கு வயிறு வலித்ததாக கூறி அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். மேலும் அவரது வயிறும் கல் போன்று வீங்கியிருந்தது.

இதையடுத்து அவரது வயிற்றை எக்ஸ்ரே எடுத்து பார்த்த போது அதில் ஏராளமான பொருட்கள் இருந்தது தெரியவந்தது. பின்னர் அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அவரது வயிற்றில் இருந்து தாலி, இரும்பு ஆணிகள், நட்டுகள், போல்டுகள், ஊக்குகள், கொண்டை ஊசிகள், ஹேர் பின்கள், பிரேஸ்லெட்கள், சங்கிலிகள், வளையல்கள் என அனைத்தையும் எடுத்தனர்.

சுமார் 2 மணி நேரம் செய்யப்பட்ட இந்த அறுவை சிகிச்சையில் ஒன்றரை கிலோ இரும்பு பொருட்கள் இருந்தது அகற்றப்பட்டது. அவரது உடல் நிலை சீராக உள்ளதாகவும் அக்யூபேஜியா என்ற ஒரு வகை அபூர்வ நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இதுபோன்று இரும்பு பொருட்களை உண்பர் என்றும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து