முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதலீடு செய்ய இந்தியா சிறந்த நாடு - சிங்கப்பூரில் பிரதமர் பெருமித பேச்சு

புதன்கிழமை, 14 நவம்பர் 2018      உலகம்
Image Unavailable

சிங்கப்பூர் : இந்தியாவில் உள்ள 130 கோடி மக்களுக்கும் அவர்களின் வசதிக்கும், வாழ்க்கைத் தரத்துக்கும் ஏற்றார்போல் நிதிச் சேவை, திட்டங்களை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறோம். முதலீடு செய்ய இந்தியா சிறந்த நாடு என்று பிரதமர் மோடி பெருமிதத்தோடு பேசினார்.

சிங்கப்பூரில் நிதித்துறை நிறுவனங்கள், நிறுவனத் தலைவர்கள், தொழில்முனைவோர்கள் என 100-க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து 30 ஆயிரம் பிரதிநிதிகள் பங்கேற்கும் 3 நாள் மாநாடு நேற்று தொடங்கியது. இந்த மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பட்டார்.

கடந்த 2016-ம் ஆண்டில் இருந்து தொடர்ந்து 3-வது ஆண்டாக இது நடத்தப்பட்டு வரும் இந்த மாநாட்டில் பிரதமர் மோடி பேசியதாவது:

உலகில் எந்தத் தலைவருக்கும் கிடைக்காத கவுரவத்தை இந்த மாநாடு எனக்கு கொடுத்திருக்கிறது. இதுவரை எந்தத் தலைவரும் சிறப்பு அழைப்பாளராக வந்ததில்லை என்கிற போது முதல் முறையாக என்னை இங்கு அழைத்துள்ளது எனக்குக் கிடைத்த மிகப்பெரிய மரியாதையாகும்.

இன்றுள்ள தொழில்நுட்பம் இந்தியாவில் நிர்வாகத்தையும், மக்களுக்கும் அளிக்கும் சேவையின் தரத்தையும் மாற்றி இருக்கிறது. தொழில்நுட்பத்தால் புதிய கண்டுபிடிப்புகளும், நம்பிக்கையும், வாய்ப்புகளும் உருவாகியுள்ளன.

இந்தப் புதிய உலகத்துக்கு போட்டித்தன்மையையும், சக்தியையும் தொழில்நுட்பம் வழங்கியுள்ளது. வாழ்வதற்கு ஏராளமான வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுத்திருக்கிறது. ஜனநாயக முறையில் மக்கள் தங்களுக்குத் தேவையான பொருளாதார சேவைகளைப் பெற்று வருகிறார்கள்.

இந்த நிதித் திருவிழாவை எதிர்காலத்தே நோக்கிக் காத்திருக்கும் இந்தியாவின் இளைஞர்களுக்காக அர்ப்பணிக்கிறேன். இந்தியாவில் உள்ள 130 கோடி மக்களுக்கும் அவர்களுக்கு ஏற்றார்போல், கிடைக்கும் வகையில் நிதிச்சேவைகளை நாங்கள் கிடைக்கச் செய்திருக்கிறோம். 120 கோடிக்கும் அதிகமான மக்களுக்கு சில ஆண்டுகளில் ஆதார் கார்டுகளை உருவாக்கிக் கொடுத்திருக்கிறோம்.

இந்தியா என்பது பல்வேறுபட்ட சூழல்களையும் சவால்களையும் கொண்ட நாடாகும். பிரச்சினைகளுக்கான தீர்வும் வேறுபட்டதாக இருக்க வேண்டும். எங்களின் டிஜிட்டல் மயமாக்கல் வெற்றி பெற்றுள்ளது. ஏனென்றால், டிஜிட்டல் பரிமாற்றம் என்பது அனைத்து மக்களுக்கும் நனவாகியுள்ளது.

உலகிலேயே அதிகமான இண்டர்நெட் டேட்டாக்களை நுகரும் நாடுகளில் இந்தியா முன்னணியில் இருக்கிறது. நிதித் தொழில்நுட்பத்தை விரைவாகத் தத்தெடுத்து பயன்படுத்திக்கொண்ட நாடுகளிலும் இந்தியா முன்னணியில் இருக்கிறது. முதலீடு செய்வதற்கு இந்தியா ஏற்ற நாடு. இந்தியாவைப் பற்றி என்ன கனவை நாங்கள் காண்கிறோமோ அதுபோல் உலகமும் இருக்க வேண்டும் என்று நினைப்போம். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து