முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இலங்கைக்கு எதிரான 2-வது டெஸ்ட்: சாம் கரனின் ஆட்டத்தால் இங்கிலாந்து 285 ரன்கள்

புதன்கிழமை, 14 நவம்பர் 2018      விளையாட்டு
Image Unavailable

கண்டி : கண்டியில் இலங்கை-இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 285 ரன்களுக்குச் சுருண்டது. தொடர்ந்து ஆடிய இலங்கை 26/1 என்று முதல் நாள் ஆட்டத்தை முடித்துள்ளது.

பர்ன்ஸ் 43 ரன்

பல்லகிலே பிட்ச் ஸ்பின்னர்களுக்குச் சாதகமானது. ஆனால் முதல்நாளில் விழுந்த 11 விக்கெட்டுகளில் 10 விக்கெட்டுகள் ஸ்பின்னர்களுக்கே. ஜோ ரூட் டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக 7வது டாஸை வென்றார். பின் பேட்டிங் தேர்வு செய்தார். பின் களமிறங்கிய இங்கிலாந்து வீரர், ஜெனிங்ஸ் வேகப்பந்து லக்மலிடம் 1 ரன்னில் வெளியேறினார்.  ஜோ பர்ன்ஸ் (43), பென் ஸ்டோக்ஸ் (19) இணைந்து ஸ்கோரை 44 ரன்களுக்குக் கொண்டு சென்றனர். திலுருவன் பெரேரா ரவுண்ட் த விக்கெட்டில் வீசிய பந்தை ஸ்டோக்ஸ் லைனைத் தவறாகக் கணித்து எல்.பி.ஆனார். நடுவர் ரவி நாட் அவுட் என்றார், ஆனால் ரிவியூவில் அவுட் என்று தெரியவந்தது. ஜோ ரூட், இடது கை ஸ்பின்னர் புஷ்பகுமாரா பந்தில் மட்டை, கால்காப்புக்கு இடையே இடைவெளியினால் பவுல்டு ஆகி 14 ரன்களில் வெளியேறினார். பர்ன்ஸ் 43 ரன்களில் அகிலா தனஞ்ஜெயா பந்தில் ஸ்லிப்பில் கேட்ச் ஆகி வெளியேறினார்.

ஜோஸ் பட்லர் ...

ஜோஸ் பட்லர் இறங்கி ஸ்பின்னை ஸ்வீப் ஆடத் தொடங்கி ஆக்ரோஷம் காட்டினார். மொயின் அலி, 10 ரன்களில் ரூட் போலவே நேர் பந்தில் புஷ்பகுமாராவிடம் பவுல்டு ஆகி வெளியேறினார். கடந்த டெஸ்ட் அறிமுக விக்கெட் கீப்பிங் சத நாயகன் பென் ஃபோக்ஸ் 29 பந்துகளில் 3 பவுண்டரிகளுடன் 19 ரன்கள் எடுத்து பெரேரா பந்தை ஸ்வீப் செய்து ஸ்லிப்பில் கேட்ச் ஆனார். ஜோஸ் பட்லர் தன் சக்தி வாய்ந்த ஸ்வீப், ரிவர்ஸ் ஸ்வீப்களில் 67 பந்துகளில் 63 ரன்கள் எடுத்த நிலையில் புஷ்பகுமாரா பந்தை ரிவர்ஸ் ஸ்வீப் செய்து தேவையில்லாமல் கேட்ச் ஆகி வெளியேறினார்.

ரஷீத் - சாம் கரண்

ரஷீத் (52 பந்துகளில் 31), சாம் கரண் 45 ரன்கள் கூட்டணி அமைத்ததில் இங்கிலாந்து 200 ரன்களைப் பார்த்தது. ஆதில் ரஷீத், புஷ்பகுமாராவை இன்னிங்சின் முதல் சிக்சருக்குத் தூக்கினார். ஆனால் சாம் கரண் 50 பந்துகளில் 10 என்றிருந்தவர் வெறி கொண்டு சிக்சர்களாக அடித்துத் தள்ளினார். இதில் அகிலா தனஞ்ஜயாவை எக்ஸ்ட்ரா கவரில் அடித்த சிக்ஸ் அற்புதம். ஆனால் அவர் 53 ரன்களில் இருந்த போது லாங் ஆஃபில் புஷ்பகுமாரா கேட்சை விட்டார். ரஷீத் 31 ரன்களில் பெரேராவிடம் வெளியேற, லீச் 7 ரன்களில் தனஞ்ஜெயாவிடம் பவுல்டு ஆனார். சாம் கரண் அதிரடியில் கடைசி விக்கெட்டுக்காக 60 ரன்கள் சேர்க்கப்பட்டது.

285 ரன்கள்...

கடைசி விக்கெட்டாக சாம் கரன் பெரேரா பந்தை லாங் ஆஃபில் தூக்கி அடித்து கேட்ச் ஆக இங்கிலாந்து 285 ரன்களை எட்டியது. இலங்கை தரப்பில் பெரேரா 4 விக்கெட்டுகள், புஷ்பகுமாரா 3 விக்கெட்டுகள். தனஞ்ஜயா 2 விக்கெட், ஆனால் சாம் கரன், பட்லரிடம் அதிகம் சிக்கிய தனஞ்ஜயா 14 ஓவர்கள்ல் 80 ரன்கள் விளாசப்பட்டார். இலங்கை ஆட்ட முடிவில் சில்வா விக்கெட்டை லீச்சின் ஸ்பின்னுக்கு இழந்து 26/1 என்று உள்ளது. கருணரத்னே 19 ரன்களுடனும் புஷ்பகுமாரா 1 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.
.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து