முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காஷ்மீரை இந்தியாதான் ஆக்கிரமித்துள்ளதாம்! பாக். முன்னாள் வீரர் ஷாகித் அப்ரிடி சொல்கிறார்

வியாழக்கிழமை, 15 நவம்பர் 2018      உலகம்
Image Unavailable

கராச்சி,காஷ்மீரை இந்தியாதான் ஆக்கிரமித்துள்ளது. காஷ்மீர் பாகிஸ்தானுக்கு வேண்டாம் என்று கூறவில்லை.  என் பேச்சை இந்திய ஊடகங்கள் திரித்து விட்டன என்று பாகிஸ்தான் முன்னாள் வீரர் ஷாகித் அப்ரிடி கூறியுள்ளார்.

பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷாகித் அப்ரிடி இங்கிலாந்தில் மாணவர்கள் நாடாளுமன்றத்தில் பேசியதாவது,
பாகிஸ்தான் காஷ்மீரைக் கேட்கவில்லை. இந்தியாவுக்கும் காஷ்மீரைக் கொடுக்க வேண்டாம். காஷ்மீர் மாநிலத்தைச் சுதந்திரமாக செயல்பட விடுங்கள். அவ்வாறு சுதந்திரமாகச் செயல்பட்டால் குறைந்தபட்சம் மனிதநேயம் உயிருடன் இருக்கும். மக்கள் உயிரிழப்புகளைச் சந்திக்காமல் இருப்பார்கள்.4 மாநிலங்களைக் கூட பாகிஸ்தானால் நிர்வகிக்க முடியாது. பாகிஸ்தானுக்கு காஷ்மீர் வேண்டாம். அங்கு மிகப்பெரிய பிரச்சினையே மனிதநேயம்தான். மக்கள் நாள்தோறும் உயிரிழந்து வருவது வேதனையாக இருக்கிறது. இந்து, முஸ்ஸிம் என எந்தச் சமூகத்தில் உயிரிழப்புகள் நேரிட்டாலும் அது வேதனையானது என்று தெரிவித்தார். இதுதொடர்பாக வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்வை ஏற்படுத்தின.

இந்நிலையில், பாகிஸ்தான் வீரர் ஷாகித் அப்ரிடி நேற்று டுவிட்டரில், காஷ்மீர் குறித்து நான் கூறிய கருத்துகளை இந்திய ஊடகங்கள் தவறுதலாக திரித்து வெளியிட்டுள்ளன. என்னுடைய நாட்டின் மீது மிகுந்த பற்றும், அபிமானமும் கொண்டவன். மிகப்பெரிய மரியாதை வைத்திருக்கிறேன். அதேசமயம், போராடி வரும் காஷ்மீர் மக்களின் போராட்டத்தையும் நான் மதிக்கிறேன். அனைத்து இடங்களிலும் மனிதநேயம் காக்கப்பட வேண்டும். காஷ்மீர் மக்களின் உரிமைகள் காக்கப்பட வேண்டும்.நான் பேசிய பேச்சின் முழுமையான வீடியோ விவரங்கள் வெளியாகவில்லை. தேவையானவற்றை மட்டும் வெளியிட்டுள்ளனர். நான் பேசியதாகக் கூறப்படும் காட்சிக்கு முன் என்ன பேசினேன் என்பது அதில் இல்லை. என்னைப் பொறுத்தவரை காஷ்மீர் தீர்க்கப்படாத பிரச்சினைக்குரிய பகுதியாகும். காஷ்மீரை இந்தியா காட்டுமிராண்டித்தனமான ஆக்கிரமித்துள்ளது. ஐ.நா. சபை தீர்மானத்தின்படி காஷ்மீர் பிரச்சினை கண்டிப்பாகத் தீர்க்கப்பட வேண்டும். காஷ்மீர் விடுதலைக்காக நான் மட்டுமல்ல ஒவ்வொரு பாகிஸ்தானியர்களும் ஆதரவு அளிப்பார்கள். காஷ்மீர் எப்போதும் பாகிஸ்தானைச் சேர்ந்ததுதான் என்று ஷாகித் அப்ரிடி தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து