முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெண் பொம்மையை திருமணம் செய்த 35 வயது ஜப்பான் இளைஞர்

வியாழக்கிழமை, 15 நவம்பர் 2018      உலகம்
Image Unavailable

டோக்கியோ,கிரிப்டன் பியூச்சர் என்ற ஒரு நிறுவனம் 16 வயது பெண் போல இருக்கிற ஒரு முப்பரிமாண உருவத்தை கற்பனையில் உருவாக்கி அதுக்கு ஹட்சுனே மிகு என்று பெயரும் வைத்தது. இந்த பொம்மையைதான் அகிஹிகோ கொண்டோ என்ற இளைஞர் லவ் பண்ண ஆரம்பித்தார். 35 வயதான இளைஞருக்கு 16 வயசு பொம்மை மேல் அப்படி ஒரு லவ்.
கடைசியில் பொம்மையை கல்யாணம் பண்ணிக்கறேன்னு வீட்ல போய் சொன்னதும் பெற்றவர்கள் பொம்மை போல் நின்றுவிட்டார்கள். வேண்டாம்ப்பா. இதெல்லாம் நமக்கு சரிப்பட்டு வராது, ஒத்துவராது என்று மகனிடம் சொல்லி பார்த்தார்கள்.

ஆனால், இளைஞர் ஒத்த காலில் நின்றார். கட்டினா அவளதான் கட்டுவேன் என்று பிடிவாதம் பிடித்தார். அதுமட்டும் இல்லாமல், மிகு பொம்மையை போலவே தானும் ஒரு முப்பரிமாண பொம்மையை செய்து தனது கைக்குள்ளேயே வைத்து கொண்டார். அதை பெற்றோரிடம் காட்டி, இவளை எனக்கு கட்டி வைக்க போறீங்களா இல்லையா? என்று பெற்றோரிடம் கேட்டார். பொண்ணு மேல மகன் இவ்வளவு உயிரை வெச்சிருக்காரே என்று நினைத்த பெற்றோரும் வேறு வழி இல்லாமல் கல்யாணத்துக்கு ஓகே சொன்னார்கள்.முப்பரிமாண உருவத்துக்கு கல்யாண மோதிரம் அணிவிக்க முடியாதே. அதனால் தானே உருவாக்கின மிகு பொம்மைக்கு மோதிரம் மாற்றி கல்யாணம் செய்து கொண்டார். தன்னுடைய கல்யாணத்துக்கு 40 பேரை கூப்பிட்டிருந்தார் அகிஹிகோ கொண்டோ. என்னை காலைல எழுப்பி விடறதில் இருந்து ஆபீஸ் கிளம்புற வரைக்கும், அப்பறம், ஆபீஸ்ல இருந்து வீட்டுக்கு வந்து தூங்கற வரைக்கும் எனக்கு இவள் துணையாக இருந்திருக்கிறாள். இனிமேலும் என் வாழக்கை முழுசும் இவள் என்கூடவே வருவாள். இவள் ஒருத்தி போதும் எனக்கு.. மிச்சம் இருக்கிற என் வாழ்க்கையை கழிச்சிடுவேன் என்று சொல்கிறார் அந்த புது மாப்பிள்ளை.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து