முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கிருஷ்ணராஜ சாகர் அணையில் காவிரித் தாய்க்கு 125 அடி உயர சிலை:கர்நாடக முதல்வர் அறிவிப்பு

வியாழக்கிழமை, 15 நவம்பர் 2018      இந்தியா
Image Unavailable

 பெங்களூரு :  காவிரியில் கட்டப்பட்டுள்ள கிருஷ்ணராஜ சாகர் அணையில் காவிரித் தாய்க்கு 125 அடி உயர சிலை நிறுவப்பட உள்ளதாக கர்நாடக முதல்வர் குமாரசாமி அறிவித்துள்ளார்.

கர்நாடக மாநிலம் குடகு மாவட்டத்தில் உருவாகி நெடுந்தூரம் பயணித்து வரும் காவிரி, தமிழகத்தில் வங்காள விரிகுடா கடலில் கலக்கிறது. கர்நாடகத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பெரிய அணைகளில் கிருஷ்ணராஜ சாகர் அணையும் ஒன்றாகும்.

இந்நிலையில் காவிரியில் கட்டப்பட்டுள்ள கிருஷ்ணராஜ சாகர் அணையில் காவிரித் தாய்க்கு 125 அடி உயர சிலை நிறுவப்பட உள்ளதாக கர்நாடக முதல்வர் குமாரசாமி அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கிருஷ்ணராஜ சாகர் அணையில் காவிரித் தாய்க்கு 125 அடி உயர சிலை நிறுவப்பட உள்ளது. இந்த சிலை அமையவுள்ள வளாகத்தில் அருங்காட்சியகம் ஒன்றும் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த அருங்காட்சியகத்தில் அணையின் முழுத் தோற்றத்தை பார்வையிடும் வகையில், சுமார் 360 அடி உயர கண்ணாடி கோபுரம் ஒன்றை அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த சிலையானது தனியார் மற்றும் பொதுமக்களின் முழு ஒத்துழைப்புடன் நிறுவப்பட உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து