முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சுய உதவிக் குழு பெண்களுக்கு இலவச ஸ்மார்ட் போன்கள்: நவீன் பட்நாயக்

வியாழக்கிழமை, 15 நவம்பர் 2018      இந்தியா
Image Unavailable

புவனேஷ்வர் : ஒடிஸாவில் சுய உதவிக் குழுக்களில் இருக்கும் பெண்களுக்கு இலவச நவீன செல்லிட பேசிகள் (ஸ்மார்ட் போன்) வழங்கப்படும் என்று அந்த மாநிலத்தின் முதல்வர் நவீன் பட்நாயக் அறிவித்துள்ளார்.

புவனேசுவரத்தில் நடைபெற்ற மேக் இன் ஒடிஸா மாநாட்டின் இடையே நடைபெற்ற கருத்தரங்கில், இதுகுறித்து அவர் பேசியதாவது:

ஒடிஸாவில் உள்ள பெண்கள் ஒவ்வொருவரும், பொருளாதாரம் குறித்த அறிவு பெற்றிருக்க வேண்டும் என்பது எனது கனவாகும். இதன் முதல்படியாக, மாநிலத்தில் உள்ள 6 லட்சம் சக்தி சுயஉதவிக் குழுக்களுக்கு எனது அரசு நவீன செல்லிடப்பேசிகளை அளித்து, அவர்களை கணினி அறிவுத்திறன் பெற்றவர்களாக்க உறுதிபூண்டுள்ளது.

பெண்கள் அதிகாரம் பெறுவதை மிகவும் முக்கியமான நடவடிக்கையாக கருதுகிறேன். மேக் இன் ஒடிஸா திட்டத்தின் 2ஆவது மாநாடானது, பெண் தொழிலதிபர்களை முன்னிறுத்தி நடைபெறுவது மகிழ்ச்சியளிக்கிறது. பெண்களுக்கு அதிகாரமளிக்காமல், எந்தவொரு நாடாலும், மாநிலத்தாலும், சமூகத்தாலும் முன்னேற முடியாது. கடந்த 2000ஆம் ஆண்டில் நான் முதல்வராக பதவியேற்றது முதல், எனது அரசானது பெண்களுக்கு முக்கிய பங்களிப்பு அளிப்பதற்காக பணியாற்றி வருகிறது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து