முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியாவில் ஓராண்டில் 100 ஜி.பி.பி.எஸ் வேக இணையதள வசதி: இஸ்ரோ தலைவர் சிவன் தகவல்

வியாழக்கிழமை, 15 நவம்பர் 2018      இந்தியா
Image Unavailable

ஸ்ரீ ஹரி கோட்டா : வளர்ந்த நாடுகளுக்கு இணையாக இந்தியாவும் 100 ஜி.பி.பி.எஸ். வேக இணையதள வசதியை வரும் 2019 செப்டம்பரில் இந்தியா பெறும் என இஸ்ரோ தலைவர் சிவன் கூறினார்.

ஜிசாட்-29 செயற்கைக்கோள் ஜி.எஸ்.எல்.வி. மார்க்3-டி2 ராக்கெட் மூலம்   வெற்றிகரமாக ஏவப்பட்டு, விண்ணில் நிலைநிறுத்தப்பட்ட பின்னர், செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு சிவன் அளித்த பேட்டி வருமாறு:

இஸ்ரோ சார்பில் இப்போது அனுப்பப்பட்டுள்ள ஜிசாட்-29 செயற்கைக்கோள், அதிநவீன தகவல்தொடர்பு தொழில்நுட்பத்துடன் கூடிய செயற்கைக்கோளாகும். அடுத்ததாக ஜிசாட்-11, ஜிசாட்-20 செயற்கைக்கோள்கள் விண்ணில் செலுத்தப்படும்.

இவற்றை அனுப்பி முடித்த பின்னர், வளர்ந்த நாடுகளுக்கு இணையாக இந்தியாவும் வருகிற 2019 செப்டம்பரில் 100 ஜி.பி.பி.எஸ். வேக இணையதள வசதியைப் பெறும்.

மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் ககன்யாங் திட்டத்தைப் பொருத்தவரை, பல்வேறு பரிசோதனைகளைச் செய்ய வேண்டியுள்ளது. அதற்காக முதலில் இரண்டு முறை ஆளில்லாத விண்கலத்தை  விண்வெளிக்கு அனுப்பி, மீண்டும் புவிக்கு கொண்டு வரப்பட்டு சோதிக்கப்படும். அதன் பிறகு மூன்றாவது முறை அனுப்பும்போது, 3 பேருடன் விண்கலம் அனுப்பப்படும். அவர்கள் விண்வெளியில் 5 முதல் 7 நாள்கள் தங்கியிருந்து ஆய்வுகளை மேற்கொண்டு விட்டு, பாதுகாப்பாக பூமிக்கு திரும்பி வருவர்.

இந்தத் திட்டத்தில் விண்வெளிக்கு அனுப்பும் நபர்களைத் தேர்வு செய்வது என்பது, இஸ்ரோ மட்டுமின்றி மேலும் சில அமைப்புகள் செய்ய வேண்டிய பணியாகும். இப்போது, இந்தத் திட்டத்தை விளக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அடுத்ததாக, ஏவு தளத்தை மாற்றியமைப்பது, ராக்கெட்டில் சில மாற்றங்களைச் செய்யும் பணிகள் மேற்கொள்ளப்படும்.

அடுத்த மூன்று ஆண்டுகளில் இந்த ககன்யாங் திட்டத்தை செயல்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. முதல் கட்டமாக, வரும் 2020-ஆண்டு டிசம்பரில் ஆளில்லாத விண்கலம் விண்வெளிக்கு அனுப்பி, திரும்ப வரவழைக்கப்படும்.

எடை படிப்படியாக உயர்த்தப்படும்: இன்றைய வெற்றி மூலம் பயன்பாட்டு ராக்கெட் பட்டியலில் இணைந்திருக்கும் ஜி.எஸ்.எல்.வி. மார்க் 3 ராக்கெட் 6,000 கிலோ எடையைத் தாங்கிச் செல்லும் வகையில் தரம் உயர்த்தப்பட உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து