முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திண்டுக்கல் அருகே தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் கொள்ளை முயற்சி ரூ.4.50 கோடி நகைகள் தப்பியது

வியாழக்கிழமை, 15 நவம்பர் 2018      திண்டுக்கல்
Image Unavailable

திண்டுக்கல், - திண்டுக்கல் அருகே தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் நடந்த கொள்ளை முயற்சியில் எதுவும் சிக்காததால் ரூ.4.50 கோடி மதிப்பிலான நகைகள் தப்பியது.
திண்டுக்கல் அருகிலுள்ள நல்லமநாயக்கன்பட்டியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி உள்ளது. இங்கு நகைக்கடன் மற்றும் பயிர்க்கடன்கள் வழங்கப்பட்டு வருகிறது. நேற்றுமுன்தினம் மாலையில் வழக்கம் போல் ஊழியர்கள் அனைவரும் பணியை முடித்து விட்டு வங்கியைப் ஞீட்டிச் சென்று விட்டனர். நேற்று அதிகாலை வங்கியின் மெயின் கேட் உடைக்கப்பட்டிருந்ததைப் பார்த்த அப்பகுதி மக்கள் இதுகுறித்து வங்கி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் வந்து பார்த்து வங்கிக்குள் கொள்ளையர்கள் புகுந்திருந்ததை அறிந்து அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து திண்டுக்கல் தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். நள்ளிரவில் வங்கிக்கு வந்த கொள்ளையர்கள் மெயின் கேட்டை உடைத்து உள்ளே புகுந்துள்ளனர். பின்னர் வங்கியில் இருந்த 2 சி.சி.டி.வி. கேமராவை அடித்து நொறுக்கி விட்டு பணம், நகைகளை கொள்ளையடிக்க முயன்றனர். அவர்களது உருவம் வங்கிக்குள் இருந்த 3வது கேமராவில் பதிவாகி இருந்தது. வங்கிக்குள் 2 கொள்ளையர்கள் புகுந்து இந்தகொள்ளை முயற்சியில் ஈடுபட்டிருந்தது பதிவாகி இருந்தது. ஆனால் நகை, பணம் வைக்கப்பட்டிருந்த அறையை திறக்க முடியாததால் அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பியுள்ளனர்.  இதனால் லாக்கரில் இருந்த ரூ.4.50 கோடி நகை மற்றும் பல லட்சம் ரொக்கப்பணம் தப்பியது.
இதனையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கேமராவில் பதிவாகி இருந்த கொள்ளையர்களின் உருவத்தை வைத்து அவர்களை தேடும் பணியில் இறங்கியுள்ளனர். மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு முக்கிய தடங்களை பதிவு செய்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து