முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆண்டிபட்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் ஆலோசனை கூட்டம்

வியாழக்கிழமை, 15 நவம்பர் 2018      தேனி
Image Unavailable

 தேனி - தேனி மாவட்டம் ஆண்டிபட்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான ஆலோசனை கூட்டம் ஒன்றிய செயலாளர் லோகிராஜன் தலைமையில் இன்று மாலை ஆண்டிபட்டியில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் ஆண்டிபட்டி சட்டமன்ற தேர்தலில் எவ்வாறு செயல்படுவது, புரட்சித்தலைவி அம்மா அவர்களின் நல்லாசியுடன் நடக்கும் கழக ஆட்சியில் தமிழக மக்களுக்கு செய்து வரும் நலத்திட்டங்களை எடுத்துச் சொல்வது உள்ளிட்ட ஆலோசனைகளை வழங்க ஆண்டிபட்டி சட்டமன்ற இடைத்தேர்தல் பொறுப்பாளர்கள்  கழக ஒருங்கிணைப்பாளரும், தமிழக துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன், சுகாதார துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர், மாவட்ட கழக செயலாளர் எஸ்.பி.எம்.சையதுகான், தேனி பாராளுமன்ற உறுப்பினர் ஆர்.பார்த்திபன், கம்பம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.டி.கே.ஜக்கையன் ஆகியோர் வருகை தர உள்ளனர். எனவே இக்கூட்டத்தில் மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், கிளை கழக நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், கூட்டுறவு சங்க தலைவர்கள், இயக்குநர்கள் மற்றும் தொண்டர்கள் திரளாக கலந்து கொள்ள வேண்டுமென்று மாவட்ட கழக செயலாளர் எஸ்.பி.எம்.சையதுகான் தெரிவித்துள்ளார். இக்கூட்டத்திற்காக கழக மாநாடு போன்று மிக பிரமாண்டமான ஏற்பாடுகளை ஆண்டிபட்டி ஒன்றிய கழக செயலாளர் லோகிராஜன் தலைமையில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து